உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெலுங்கு

83

கலிங்கத்திற்கு வடக்கில் ஆந்திரம்' ன ஒரு தெலுங்கு நாடிருந்ததென்றும், ஓர் ஆந்திர அரச மரபினர் வட இந்தியாவையும் ஆண்டு வந்தனரென்றும், வடமொழி இருக்குவேத ஐத்திரேய பிரமாணத்தாலும் இதிகாச புராணங்களாலும் அறியக் கிடக்கின்றது. ஆந்திரரை ஐத்திரேய பிரமாணம் அநாகரிகராகக் குறிப்பிடினும் பிளினி, ஒரு வலிமைமிக்க நாட்டாராகக் கூறியுள்ளார். 'பியூட்டிங்கர் பட்டிகை' களிலும் (Pautinger Tables) ஆந்திரர் குறிக்கப்படுகின்றனர். சேரன் செங்குட்டுவனுக்கு வடநாட்டுச் செலவில் துணைவரான நூற்றுவர் கன்னர் ஆந்திர மன்னரா யிருந்திருக்கலாம்.

ஆந்திரர் நெடுங்காலமாக ஒரு தனி மன்பதையராக இருந்து வந்திருக்ன்றனர்; எனினும், அவரது மொழி கடைக் கழகக் காலம் வரயில் கொடுந்தமிழாயும் கிளைமொழியாயுமிருந்து அதன் பின்னரே வடமொழிக் கலப்பால் இனமொழியாய்ப் பிரிந்துவிட்டது. கடைக்கழகக் காலத்தில் வேங்கட வெல்லையில் தெலுங்கு இருந்ததில்லை. அன்று வேங்கட மலை புல்லி என்னும் தமிழ் வள்ளலுக் குரியதாயிருந்தது.

"புல்லிய

வேங்கட விறல்வரைப் பட்ட

"கடுமான் புல்லிய காடிறந் தோரே

22

(புறம்.385)

(அகம்.)

தொண்டை மண்டலத்து வேங்கடக் கோட்டத்தைச் சார்ந்ததும் காளத்தியைச் சூழ்ந்ததுமான பொத்தப்பி நாடு கண்ணப்ப நாயனார் திருநாடாகும்.

66

'கண்ணப்பர் திருநா டென்பர்..... பொத்தப்பி நாடு"

(பெரிய. கண். 1.)

வேங்கடமலை தொண்டை நாட்டுப் பல்குன்றக் கோட்டத்தைச்

சேர்ந்தது.

66

பல்குன்றக் கோட்டமென்பது தொண்டை நாட்டின் பெரும்பிரிவாகிய 24 கோட்டங்களுள் ஒன்று... பல்குன்றக் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம்" என்னும் கோட்டத்துச் சிலைநாட்டுத் திருவேங்கடம் என்னும் சிலாசாசன (கல்வெட்டு) வாக்கியத்தால் திருவேங்கடமலை (திருப்பதி)யும் பல்குன்றக் கோட்டத்துள்ளதென்று தெரிகிறது. "குன்றுசூ ழிருக்கை நாடுகிழ வோனே" (மலைபடு. 583) என்பது இதனை வலியுறுத்தும்.

(பத். சாமிநா. ப. 57

1. திருகலிங்கத்துள் அடங்காது ஆந்திரம் என ஒரு தெலுங்கு நாடும் இருந்ததேனும் திரிகலிங்கப்பெயர் பொதுப் பெயராவதற்கு இழுக்கில்லை ஆங்கிலர் சாக்சனியர் சூட்டர் ஆகிய மும்மரபினர் குலநாடும் மொழியும் ஆங்கிலம் என்னும் பெயரால் வழங்குதல் காண்க.