உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




84

திரவிடத் தாய்

தெலுங்கு மொழியை முதன் முதலாகக் குறிப்பிட்ட அயலார் 7ஆம் நூற்றாண்டினரான ஹுவென் த்சாங் (Hwen Thsang) என்னும் சீனத் திருப்போக்கர் (யாத்திரிகர்).

"சுரஞ்செல் கோடுயர் கதுமென விசைக்கு

நரம்பொடு கொள்ளு மத்தத் தாங்கட்

நெடும்பெருங் குன்ற நீந்தி

""

கடுங்குரற் பம்பைக் கதநாய் வடுகர்

என்று குடவாயிற் கீரத்தனாரும்,

“குல்லைக் கண்ணி வடுகர் முனையது

பல்வேற் கட்டி நன்னாட் டும்பர்

மொழிபெயர் தேஎத்த ராயினும்

வழிபடல் சூழ்ந்திசி னவருடை நாட்டே

என்று மாமூலனாரும்,

"நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ்வரம் பறுத்த தண்புன னன்னாட்டு"

(நற்.212)

(குறுந். 11)

(சிலப். 8 : 1 -2)

என்று இளங்கோவடிகளும் பாடியிருப்பதால், கடைக்கழகக் கலத்தில் வேங்கடத்திற்குத் தெற்கில் தெலுங்கு வழங்கவில்லை யென்பது வெளிப்படை.

நம்பியாரூரர் (சுந்தரமூர்த்தியடிகள்) சேரநாடு சென்று மீண்டபோது, அவர் சேரமான் பெருமாள் நாயனாரிடம் பெற்ற பொருளைத் திருமுருகன் பூண்டியில் சில வடுகர் (அல்லது வடுகவடிவில் வந்த சிவபூதங்கள்) வழிப்பறித்ததால், 9ஆம் நூற்றாண்டிலேயே வடுகர் கொங்கு நாட்டில் குடியேறிவிட்டனர் என்பது போதரும்.

"கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லித் திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொ டாறலைக்குமிடம் முடுகு நாறிய வடுகர்வாழ் முருகன் பூண்டிமா நகர்வாய் இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிருந்தீரெம்

பிரானிரே

என்பது நம்பியாரூரரின் திருமுருகன் பூண்டிப்பதிக முதற் செய்யுள்.