உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெலுங்கு

"வடுக ரருவாளர் வான்கரு நாடர் சுடுகாடு பேயெருமை என்றிவை யாறுங் குறுகா ரறிவுடை யார்”

என்பது ஒரு பழஞ் செய்யுள்.

85

(தொல். சொல். சேனா. மேற்.91)

இவற்றினாலும், யாழ்ப்பாண அகராதியில் வடுகன் என்னும் பெயருக்கு மூடன் என்றும் பொருள் கூறியிருப்பதாலும், முதன்முதலாய்த் தமிழ்நாட்டிற்கு வந்த வடுகர் (கம்பளத்தார்) முரடராயிருந்தன ரென்றும், தமிழர் அவரொடு உறவாடவில்லை யென்றும் அறியலாம்.

"நீரெலாம் சேற்று நாற்றம் நிலமெலாங் கல்லும் முள்ளும் ஊரெலாம் பட்டி தொட்டி உண்பதோ கம்பஞ் சோறு பேரெலாம் பொம்மன் திம்மன் பெண்களோ நாயும் பேயும் காருலாங் கொங்கு நாட்டைக் கனவிலுங் கருதொ ணாதே"

'வடகலை தென்கலை வடுகு கன்னடம்

இடமுள பாடையா தொன்றி னாயினும் திடமுள ரகுகுலத் திராமன் றன்கதை

அடை வுடன் கேட்பவ ரமர ராவரே”

என்று கம்பர் பாடியிருப்பதால், 12ஆம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் வடுகர் நிலைத்துவிட்டனர் என்பதை அறியலாம்.

கோதாவரி, கிருட்டிணா கோட்டங்களைச் சேர்ந்ததும் கீழைச் சாளுக்கியம் எனப்பட்டதுமான வேங்கைநாட்டை 10ஆம் 11ஆம் நூற்றாண்டுகளிற் சோழமன்னர் ஆண்டு வந்தனர்; கீழைச் சாளுக்கியருடன் மணவுறவும் பூண்டனர். முதலாம் இராசேந்திர சோழன் வடக்கிற் படையெடுத்துச் சென்று கங்கை நாடு வரை அடி ப்படுத்தினான். கி.பி. 1115-ல் முதற் குலோத்துங் கன் தனக்குக் கலிங்க நாட்டுத் தெலுங்க மன்னன் திறை கொடுக்க மறுத்தமை காரணமாகத் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமானை ஏவி அவனொடு பொருது வென்றான்.

"மெய்க்கூத்தாவது, தேசி வடுகு சிங்களமென மூவகைப் படும்", "சுற்றுதல் எறிதல் உடைத்தல் முதலாகிய வடுகிற்குரிய கால்களும்", "ஒற்றையும் இரட்டையும் தேசிக் கூறாகலானும்