உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




86

திரவிடத் தாய் இரட்டையும் இரட்டைக்கிரட்டையும் வடுகிற் கூறாகலானும்”, “வடுகும் மட்டதாள முதலாக ஏக தாள மீறாக வைசாக நிலையிலே ஆடி முடித்த பின்னரென்க. என்னை? 'வைசாக நிலையே வடுகிற்கும் வரையார்' என்றாராகலின்" என்று (சிலப். 3 உரை) அடியார்க்குநல்லார் கூறியிருப்பதால், கடைக்கழகக் காலத்திலேயே வடுகக் கூத்தும் தமிழ்க் கூத்தின் ஒரு பகுதியாகக் கொள்ளப்பட்டிருந் தமை புலனாம். இதனால், வடுகு தோன்றாத முதற் காலத்திலேயே நாடகத்தமிழ் தோன்றிற்றென்றும், வடுக நாட்டுப் பகுதிக்குரிய தமிழ்க் கூத்தே பின்பு வடுகு என்னும் தனிப் பெயரால் வழங்கத் தலைப்பட்டதென்றும் உய்த்துணரலாம். மாற்றம் (மாட்ட), செப்பு முதலிய தமிழ்ச்சொற்களே பிற்காலத்தில் சிறிது பொருள் திரிந்து தெலுங்குச் சொற்கள் என்று சொல்லப்படுவதை இதனுடன் ஒப்பு நோக்குக.

வடுகரச ராயிரவர் மக்களை உடையர்', 'வடுகரசர்க்குச் சிறந்தார் சோழிய வரசர்' என்னுந் தொடர்களைச் சேனா வரையர் எடுத்துக்காட்டாகக் கூறியிருப்பதால், இடைக்காலத்தில் வடுக வரசர்க்கும் சோழர்க்கும் ஏற்பட்டிருந்த தொடர்பு புலனாம்.

15ஆம் நூற்றாண்டில் வீரசேகர பாண்டியனுக்கும் சந்திர சேகர சோழனுக்கும் பகைமை நேர்ந்தபோது, முந்தியவன் வேண்டுகோட்கிணங்கி விசயநகரத் தரசராகிய கிருட்டின தேவராயர் தம் படைத் தலைவராகிய நாகம நாயக்கரை அனுப்ப, அவர் சென்று சோழனை வென்றார். அதிலிருந்து சோழ பாண்டி நாடுகள் நாயக்க மன்னர் கைப்பட்டன. தெலுங்கர் பலர் தமிழ்நாட்டிற் குடியேறினர். அவருள் நாய்க்கர் (நாயுடு), இரெட்டியார் என்பவர் தலைமையானவர். கம்பளத்தாரும் சக்கிலியருமாகிய தெலுங்கர் 9ஆம் நூற்றாண்டிற்கு முன்பே தமிழ்நாட்டிற் குடியேறிவிட்டனர். அவரே முதன்முதல் வடுகர் எனப்பட்டவர்.

15ஆம்

வலி

நூற்றாண்டிற்குப் பின் பாண்டியர் குன்றியதாலும், தெலுங்கர் பலர் தமிழ்நாட்டிற் குடியேறிவிட்ட தாலும், பாண்டி நாட்டில் பல தெலுங்க வேளிரும் குறுநில மன்னரும் தோன்றினர். அங்ஙனத் தோன்றிய வேளகங்களுள் எட்டயபுரமும், பாஞ்சாலங்குறிச்சியும் தலைமையானவை.