உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தெலுங்கு

87

தலுங்கர் தமிழ்நாட்டிற் குடியேறவே, தனித்தமிழ்

நிலையங்களாயிருந்த திருவேங்கடம், திருக்காளத்தி, திருத்தணிகை முதலிய வடபாற் சிவநகரங்கள் இருமொழி நிலையங்களாக மாறிவிட்டன; தெலுங்குநாட்டை யடுத்த தமிழரும் தெலுங்கைக் கற்றுத் தெலுங்கராக மாறிவருகின்றனர்.

தெலுங்கு தற்போது மிகுந்த வடமொழிக் கலப்புள்ளதா யிருந்தாலும், ஒரு காலத்தில் வடமொழி மணமேயில்லாத கொடுந்தமிழ் வகையா யிருந்ததே. இன்றும் தெலுங்கு நாட்டூர்ப் பெயர்கள் பல ஊர் (பாலூரு), புரம் (அனந்தபுரம்), மலை (அனிமலை), குடி (தேவகுடி), கோடு (முனுகோடு), கோட்டை (கண்டிகோட்ட), பேட்டை (நேக்குணாம்பேட்ட), பள்ளி (கொத்த பல்லி), குன்றம் (பெல்லம் கொண்ட), கல் (மின்னக்கல்லு), பாலம் (நாயனிப்பாலம்), கூடம் (நடிகூடெம்), குளம் (ஸ்ரீகாகுளம்), வீடு (பட்லவீடு), மந்தை (எல்லமந்த), புரி (நெமலிபுரி), சாலை (கண்ட்டசால), பட்டினம் (விசாகப்பட்ணம்), பாடு (தாவிப்பாடு), தலை (குர்னூதல) எனத் தனித்தமிழ் ஈற்றனவாயே யுள்ளன.

தெலுங்கு திரியக் காரணங்கள்

1. தட்பவெப்ப நிலையும் நிலத்தியல்பும்.

2. மக்கட்பெருக்கம்.

3. பண்டையிலக்கிய விலக்கணமின்மை.

4. தமிழரொடு உறவு கொள்ளாமை.

5. தமிழ் நூல்களைக் கல்லாமை.

6. ஒலிமுறைச் சோம்பல்.

7. வடசொற் கலப்பு.

தெலுங்குச்சொல் வரிசைகள் 1. பெயர்ச் சொற்கள்

1. மூவிடப் பெயர் (இடம் தமிழும் வலம் தெலுங்கும்)

யான், நான் - நேனு ; யாம் -மேமு; நாம் மனமு; நீன்,

நீ - நீவு; நீர் - மீரு; அவன் வாடு; அவர் - வாரு; அது - அதி (அவள், அது); அவை - அவி; தான் - தானு; தாம் - தாமு தமரு.