உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

X

தமிழர் மதம்

முகவுரை

பகுத்தறிவுண்மை யின்மை பற்றிப் பொருள்களை

யெல்லாம்,

“உயர்தினை யென்மனார் மக்கட் சுட்டே

அஃறினை யென்மனார் அவரல பிறவே.”

என இருதிணையாக வகுத்த குமரிநாட்டுத் தமிழர், ஏனைத் துறைகளிற் போன்றே மதத் துறையிலும் தலைசிறந் திருந்தனர்.

ஆயினும், பல்சிறு தெய்வக் கொலை வேள்வி வளர்ப்பையே மதமாகக் கடைப்பிடித்துக் கடவு ளியல்பை யறியாத, ஆரியருள் ஒரு சிறு குழுவார் தென்னாடு வந்து, பழங்குடிப் பேதைமை, கொடைமடம், மதப்பித்தம் ஆகிய குற்றங்களைக் கொண்ட முத்தமிழ்வேந்தர் குடிகளையும், தாம் நிலத் தேவரென்றும் தம் இலக்கிய மொழி தேவமொழி யென்றும் சொல்லி யேமாற்றி வயப்படுத்தி,அவர் வாயிலாகப் பொது மக்களையும் அடிப்படுத்தி, தம் வேதமொழியைத் தமிழால் வளம்படுத்திச் சமற்கிருதம் என்னும் இலக்கிய நடைமொழியைத் தோற்றுவித்து, அதில் மறைநூலும் மந்திர நூலும் உட்படப் பழந்தமிழ் நூல்களையெல்லாம் மொழி பெயர்த்தபின் மூல நூல்களையெல்லாம் ஒருங்கே யழித்து விட்டு, தமிழர் மதங்களில் ஆரியத் தெய்வங்களைப் புகுத்தி இந்துமதம் என்னும் கலவை மதத்தையுண்டாக்கி, தமிழையும் தமிழரையும் மதத் துறையினின்று விலக்கி, சமற்கிருதத்தையே மதவியல் மொழியாக்கி அதிற் பிராமணரே இறைவழிபாடும் இருவகைச் சடங்கும் நடத்தி வைக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டனர். அவ்வேற்பாடே இன்றும் நடைபெற்று வருகின்றது.