உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

xi

இற்றைத் தமிழ் நிலைமையையும் தமிழர் நிலைமையையும் மேனோக்காக நோக்குவார்க்கு, தமிழ்மொழி, நாகரிகம், மதம் ஆகிய மூன்றும் ஆரியவழிப் பட்டனவாகவே தோன்றும். ஆயின், நுழைந்து நோக்குவார்க்கு, “ஆரியர் நாகரிகத்துறையில் திரவிடராக மாறியபோது, திரவிடர் மொழித் துறையில் ஆரியராகத் திரிந்துவிட்டனர்.”(`While the Aryans were Dravidised in culture the Dravidians were Aryanized in language.") என்று கில்பெர்ட்டு சிலேற்றர் கூறிய வுண்மை புலனாகாமற் போகாது.

இவ் வுண்மை சென்ற நூற்றாண்டே வெளிப்பட்ட தேனும், இன்னும் வெளியுலகிற் பரவா திருத்தற்குக் கரணியம், தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகத் தமிழ்த் திணைக் களங்களுள், அண்ணாமலை தவிர ஏனையிரண்டிலும், ஆரியச் சார்பினரும் வணிக நோக்கினருமே தலைமை தாங்குவதும், அவரைத் தமிழ் நாட்டரசுகள் போற்றி வருவதுமே, ஆகும்.

இவ் வகையிற் பேராயத்திற்கும் தி.மு.க.விற்கும் வேற்றுமை யில்லை.

முது பண்டை நூல்களெல்லாம் அழியுண்டமையின், து போதுள்ள பழநூல்களி னின்றே சான்றுகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

இந்நூல் வெளியீட்டுத் தொடர்பாக, கோவைத் தாதா பாத்துத் திரு இராம சாமிக் கவுண்டர் அவர்களின் மகனார் மறை நித்தலின்பனார் செய்த வுதவி மறக்கற் பாலதன்று.

இந் நூலைச் செவ்வையாக அச்சிட்டுத் தந்த, புன்செய்ப் புளியம்பட்டி மறைமலை அச்சக உரிமையாளர் திரு. ஆடலரசனார்க்கு, தனித் தமிழுலகம் ஆழ்ந்து கடன் பட்டுள்ளது.

இந் நூல் அச்சிட்டு மெய்ப்புத் திருத்தி யுதவிய புலவர் கா.இளமுருகனார் க.மு., புலவர் ப.கு.முருகவேள், புலவர் ந.அருணனார் ஆகியோர்க்கு ஆசிரியன் நன்றி உரித்து.

காட்டுப்பாடி விரிவு,

23-9-1972

ஞா. தேவநேயன்