உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமற்கிருத வரலாறு

5

முடிபுரை யியல்

1. எது தேவ மொழி?

தெற்கே முழுகிப் போன குமரிநாட்டில், தோரா. கி. மு. 50,000 ஆண்டுகட்கு முன், தமிழ் என்னும் உலக முதன்மொழி தோன்றிற்று. அது வடக்குநோக்கிப் பரவித் திரவிடமாகத் திரிந்தது. திரவிடம் வடமேற்கு நோக்கிப் பரவி, ஐரோப்பாவில் ஆரியமாக மாறியது ஆரியம் ஐரோப்பாவின் வடமேற்கினின்று தென்கிழக்கு நோக்கி வந்து இந்தியாவிற்குட் புகுந்து, வழக்கற்று வடதிரவிடமாகிய பிராகிருதத் தொடு கலந்து வேதமொழியாயிற்று. அதனாலேயே, மேலையாரியத்தில் உள்ள எகர ஒகரங்களை யிழந்தும், அதிலில் லாத டகர ணகரங்களைப் பெற்றும் உள்ளது. வேதமொழி தமி ழொடு கலந்து அரைச் செயற்கையான சமற்கிருதம் என்னும் இலக் கிய நடைமொழி (Literary dialect) புணர்க்கப்பட்டது.

சமற்கிருதம் ஓரிடத்தும் ஒருகாலும் ஓரினத்தாராலும் தாய் மொழியாகப் பேசப்பட்டதன்று. அது பிறப்பும் இறப்புமில்லாப் பாவை போன்றது. வேதக்காலத்தில் வடஇந்தியாவில் வழங்கிய மெழிகள் 'பிராகிருதம்' என்ப்பட்டன. பிராகிருதம் முந்திச் செய்யப்பட்டது. ஸம்ஸ்க்ருதம் = பிந்திக் கலந்து செய்யப்பட்டது. இவ் விருபெயரும் உறவியற் சொற்கள் (Relative terms). தமிழையும் ‘ த்ராவிடீ' என ஒரு பிராகிருத மாக்குவர்.

=

வேதமொழி வேறு; சமற்கிருதம் வேறு. மேலையர் சமற்கிரு தத்தை அடிப்படையாக வைத்து ஆய்ந்ததனால், தலைகீழான முடிபும் பல தவறான கருத்துங் கொண்டுள்ளனர். இனவெறியும் குமரி நாட்டிலக்கிய அழிவும் இற்றைத் தமிழரின் தாழ்நிலையும் மேலையர் கண்ணை மறைக்கின்றன.