உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

சமற்கிருத இலக்கணம்

தமிழர் மதம்

தமிழிலக்கணத்தைப் பின்பற்றிச் சமற்கிருதத்தில் முதன் முதலாகத் தோன்றிய இலக்கணம் ஐந்திரம். அதன் காலம் தோரா. கி.மு. 8ஆம் அல்லது 9ஆம் நூற்றாண்டாகும். அதன்பின், கி.மு. 4ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது ‘அஷ்டாத்யாயீ' என்னும் பாணினீயம். இரண்டும் எழுத்தும் சொால்லும் ஆகிய இரு கூறுகளையே கொண்டன.

எழுத்தின் முறை, பிறப்பு, உயிர்மெய்த் தனிவடிவம், மாத்திரை, கிளவி (பதம்), புணர்ச்சி ஆகியவற்றில், சமற்கிருத இலக்கணம் தமிழையே தழுவியுள்ளது. எழுத்தின் வரிவடிவும், கிரந்தம் நாகரி என்னும் இருவகையிலும் பெரும்பாலும் தமிழை ஒத்திருப்பது, கூர்ந்து நோக்குவார்க்குப் புலனாகும்.

பெயர் வினை இடை என்னும் தமிழ்ப் பாகுபாட்டையே, சமற்கிருதச் சொல்லிலக்கணமும் தழுவியுள்ளது. வேற்றுமைகள் இலத்தீனில் ஐந்து; கிரேக்கத்தில் ஆறு; சமற்கிருதத்தில் தமிழிற் போல் எட்டு. இதனால், வேற்றுமையமைப்பில், சமற்கிருதம் தமிழைப் பின்பற்றிய தென்பது வெளிப்படை.

சமற்கிருத இலக்கியம்

பதினெண் தொன்மங்களும் (புராணங்களும்) இராமாயணம் பாரதம் ஆகிய மறவனப்புகளும் (இதிகாசங்களும்) தவிர, இசை, நாடகம், கணியம், மருத்துவம் முதலிய பிற கலை யறிவியல் இலக் கியமெல்லாம் தமிழ் முதனூல்களின் வழிநூல்களாம். சமற்கிருதத் தில் மொழிபெயர்க்கப்பட்டபின், தமிழ் முதனூல்களெல்லாம்

அழிக்கப்பட்டுவிட்டன.

சமற்கிருதத்திற்கு முந்திய இந்திய ஆரிய இலக்கியம் வேதம் ஒன்றே. வேதத்தைப் பெண்டிரும் சூத்திரரும் ஓதக்கூடா தென்பர். ஆயின், பெண்டிரும் சூத்திரரும் சிலர் வேத மந்திரங்களையே இயற்றி யிருக்கின்றனர்.

வேதம் இயற்றிய பெண்டிர்

புலோமனை மகள்

சக்தி மகள்

ஷசி

காமை மகள்

சிரத்தை

கோரவி

அப் பிரீனா மகள்

வாக்கு

அகத்தியர் மகள்

லோபா முத்திரை