உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரையியல்

வேதம் இயற்றிய பழங்குடி மக்கள்

135

அரசர் (சத்திரியர்) : மந்தாத்திரி, ஷிவி, வசுமனான், பிரதர்த்த னன், விஸ்வாமித்திரன், மது சந்தனன், ரிஷபன், ரேணு, அம்பரிஷன், பரதன், மேதாநிதி, நாபகன், இரகுகணன், வக்ஷப்பிரியன், புரூரவன், வேனன், சுதாசன், கிருதசமதன், தேவாபி, சந்தானு முதலியோர்.

தொழிலாளர் (சூத்திரர்) : கவஷன், ஐலுஷன் முதலியோர். கலப்புக் குலத்தார் : கக்ஷீவது (அங்கநாட்டு அரசனின் புழுக்கச்சி மகன்) போன்ற பலர்.

இப் பெயர்கள் வருண சிந்தாமணியில் உள்ளவாறே எழுதப் பட்டுள்ளன.

ஆரியர் கருத்துப்படி, வடநாட்டு மக்களே பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வகைப் பாகுபாட்டினர்; தென்னாட்டுத் தமிழரும் திரவிடரும் ஆகிய அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் அனைவரும் சூத்திரரே. ஆயின், ஆட்சி செய்யும் அரசரைச் சத்திரியர் என்றும், பொருள் கொடுக்கும் வணிகரை வைசியர் என்றும் புகழ்வர். இது அதிகாரமும் பொருளும் செய்யும் வேலை. வேள்வி செய்வித்த பண்டை மூவேந்தரையும் சத்திரியர் என்று புகழ்ந்தே வேள்வி செய்விக்கத் தூண்டினர்.

வேதத்தின் பின் வேள்விமுறைகளை விளக்கும் பிரமாணங் களும், ஆரியர் தமிழரோடு தொடர்புகொண்டபின் உபநிடதங் களும் குல வொழுக்க நூல்களாகிய தரும சாத்திரங்களும் தோன்றின.

வேதம் செய்யுள் வடிவான மந்திரங்களைக் கொண்டது. முதன் முதல் தோன்றியது இருக்கு (ருக்) ஒன்றே. வேள்வி செய்தற் குரிய மந்திரங்களை அதினின்று பிரித்துத் தொகுத்தது எசுர் (யஜுர்). வேள்வியிற் பாடக்கூடிய மந்திரங்களைப் பிரித்துத் தொகுத்தது சாமம் (ஸாம). இங்ஙனம் ஒரு வேதம் மூவேதம் (வேதத்ரயீ) ஆயிற்று. அதன்பின் ஆறிலொரு பகுதி இருக்குவேத மந்திரங்களைக் கொண்டதும், பெரும்பாலும் சாவிப்பு மந்திரங் களாலானதும், உரைநடை கலந்ததுமான, அதர்வணம்(அதர்வண்) தோன்றிற்று. அதன் பின்னரே நான்மறை(சதுர்வேத) என்னும் வழக் கெழுந்தது.

வேதக் காலத்தின் பின், வேத சாத்திரங்களின் பொருளையும் பய னையும் சிறப்பையும் பெரும்பாலும் உரைநடையில் விளக்கும் உரையாகத் தோன்றியவை பிராமணம். காடுறைவு(வானப்பிரத்த) நிலையிற் பிராமணனுக்குப் பயன்படும் கொண்முடிபு நூல்கள்