உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரையியல்

147

வெல்லாம் தமிழ்ச்சொல் லென்றும், அறிந்துகொள்க. இறந்துபட்ட சொற்கட்குப் புதுச் சொற்கள் புனையப்பட்டுள.

சித்தாந்தம் - கொண்முடிபு. வேதாந்தம் - மறைமுடிபு.

தத்துவம் - மெய்ப்பொருள். தத்துவ சாஸ்திரம் - மெய்ப்

பொருள் நூல், பட்டாங்கு நூல்.

சிவ தத்துவம் சிவ மெய்ப்பொருள் (5)

-

-

சிவம் - சிவம், சக்தி - ஆற்றல், சாதாக்கியம் - அருளாண்மை, மகேசுரம் - பேரிறைவம், சுத்த வித்தை வாலறிவம்.

-

வித்தியா தத்துவம் - அறிவ மெய்ப்பொருள் (7)

மாயை - மாயை, காலம் - காலம், நியதி - ஊழ், கலை - கலை, வித்தை - அறிவம், அராகம் - விழைவு, புருடன் - ஆதன்.

ஆன்ம தத்துவம்

-

ஆத மெய்ப்பொருள் (24)

இவை முன்னரே கூறப்பட்டன (பக். 36).

தாத்துவிகம் - மெய்ப்பொருளியம் (60)

பிருதிவி -புடவி (நிலம்). இதன் கூறுகள் (5): மயிர், தோல், தசை, நரம்பு, எலும்பு.

அப்பு அம்பு (நீர்). இதன் கூறுகள் (5): சிறுநீர், வியர்வை, அரத்தம், சிலேட்டுமம் - கோழை, சுக்கிலம் விந்து (அல்லது சோணிதம்-செந்நீர்).

-

-

தேயு தீ. இதன் கூறுகள் (5): பசித்தீ, கண்சிவப்பு, கணை, நெஞ்செரிவு, பித்தம்.

வாயு - வளி. இதன் கூறுகள் (10): பிராமணன் - மூசன், அபானன் -பரியன், உதானன் - உந்தன், வியானன்-அரத்தன், சமானன்-செரியன், நாகன் விக்கன், கூர்மன் இமையன், கிருகரன்

-

-

தேவதத்தன் - ஆவிரியன், தனஞ்சயன் - உச்சியன்.

எரியன்,

ஆகாயம் - வெளி. இதன் கூறுகள் (10): சுத்தி-கன்னி, அலம் புஷா-அலம்புடை, இடை இடங்கலை, பிங்கலை வலங்கலை, சுஷ்முனா - சுழிமுனை, காந்தாரி - காந்தாரி, குகு - கரவன், சங்கினி - சங்கன், ஜிகுவா - நாவி, புருஷன் - ஆதன்.

கர்மேந்திரிய விஷயம் - கருமப்பொறிப் புலனம். இதன் கூறுகள்(5): வசனம் சொலவு, கமனம் - செலவு, தானம் தானம் (கொடை), விசர்க்கம் - கழிப்பு, ஆனந்தம் இன்புறவு.