உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

தமிழர் மதம்

ஞானேந்திரிய விஷயம் - அறிவுப்பொறிப் புலனம். இதன் கூறுகள் (5): சத்தம் - ஓசை, பரிசம் - ஊறு, ரூபம் -ஒளி, ரசம் சுவை, கந்தம் -நாற்றம்.

-

அகங்காரம் - 'நான்' உணர்வு. இதன் கூறுகள் (3): தைசதம் - தீயிகம், வைகாரிகம் - வேறுபாட்டியம், பூதாதி பூதமுதல்.

அகப்பகை யென்னும் குற்றம் (5): காமம் -காமம், குரோதம் - சினம், லோபம் - இவறல், மோகம் - மயக்கம், மதம் - செருக்கு. குணம் - குணம் (3): சாத்துவிகம் - தேவிகம், இராசதம் - மாந்திகம், தாமதம் - பேயிகம்.

வாக்கு வாய்ச்சொல் (4).

-

வை முன்னரே கூறப்பட்டன. (ப. 8)

மமகாரம் ( 'எனது' உணர்வு) என்பதற்கு எதிரான அஹங் காரம்('நான்' உணர்வு) என்னும் சமற்கிருதச் சொல் வேறு; செருக் கைக் குறிக்கும் அகங்காரம் என்னும் தமிழ்ச்சொல் வேறு. 'அஹம்' என்பது தன்மை யொருமைப் பெயர். அகம் என்பது மனத்தின் பெயர்.

கடு - கடி - கரி. கரித்தல் = மிகுதல், கடுத்தல். உப்புக் கரித்தல் என்னும் வழக்கை நோக்குக.

அகம் கரித்தல் மனம் மிகுதல், செருக்குதல். அகங்கரி- அகங்காரம். ஒ.நோ: இளக்கரி - இளக்காரம், அதிகரி - அதிகாரம். அகங்கரி என்னும் வினைச்சொல் சமற்கிருதத்தில் ல்லை. அதனால், அதை வடசொல்லாகக் காட்டும் தமிழ்ப் பகைவர், அதனை அகங்காரம் என்னும் வினைப்பெயரினின்றே திரிப்பர். நான் என்னும் தற்சுட்டு வேறு; நான் என்னும் ஆணவம் வேறு.

இருவகைப் பொருள் (சித்து X சடம்)

சத்தல் = கருதுதல். செ - செத்து - சித்து = கருத்து, அறிவு, அறிவுள்ளது. சித்து - ளமவ. ரவ ஒ.நோ: செந்துரம் - சிந்துரம்.

சட்டம் = உடம்புச் சட்டம் (bodily frame), உடம்பு. சட்டம் -சடம் = உடம்பு. சடம் - ச. ஜட.

ஒ.நோ: பட்டம் -படம் (துணி).

சடம் - சடல் - சடலம் = உடம்பு. ஒ.நோ : உடல் - உடலம்.