உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரையியல்

159

மேலும், கடவுள் உண்மையாக இல்லை யெனின், நம்பாத வனுக்குக் கேடில்லை. ஒருகால், உள்ளா ரெனின் அவனுக்குக் கேடுண்டாம். ஆதலால், நம்பா மதத்தினரும் நம்பு மதத்தைக் கடைப் பிடிப்பதே சாலச் சிறந்ததாம்.

9. மதத்தை அழிக்க முடியுமா?

கடவுள் நம்பிக்கையில்லாத தற்பெருமை வேந்தரும், நெறி தப்பிய அறிவியலாராய்ச்சியாளரும், பொதுவுடைமைக் கொள்கை யினரும், கடவுட் கொள்கையை ஒழிக்கத் தம்மால் இயன்றவரை முயன்று வந்திருக்கின்றனர். மதவியல் முற்றும் மனத்தைப் பொறுத் ததாதலின், அதை எவரும் அழிக்க வியலாது. சாக்கிய நாயனார் பகைவர்போன்று சிவப் படிமையைக் கல்லாலடித்தே, சிவனடியா ராயினர் எனின், வேறு என்ன சொல்ல விருக்கின்றது!

மேலும், பொதுவுடைமை இறைவனுக் கேற்றதே. மக்களெல் லார்க்கும் உணவெனின், தந்தை மகிழத்தானே செய்வான்! அங்ங னமே பரமத் தந்தையும்.

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக வுலகியற்றி யான்'

""

(குறள்.1062)

என்றார் திருவள்ளுவர். கிறித்தவர் எதிர்நோக்கும் ஆயிரவாண்டு அரசாட்சியும் பொதுவுடைமை வகையில்தான் இயலும்.

-

கனவு காணாது உறங்கும் நேரம் தவிர, மற்றெல்லா நேரத்தி லும் இருப்பினும், நடப்பினும், வேலை செய்யினும், உரையாடி னும் உண்ணினும் - இறைவனை நினைக்கவும் வழுத்தவும் வேண் டவும் இயலு மாதலின், மனம் உள்ளவரை மதத்தை ஒருவராலும் அழிக்க முடியா தென அறிக.

10. நம்பா மதமும் ஒரு மதமே

கடவுளும் மறுமையும் இல்லையெனும் கொள்கையும் ஒரு மதமாதலால், மதத்தை ஒழிக்கவேண்டு மென்பது, செருக்கை யடக்க வேண்டும் என்றே பொருள்படுவதாகும். உள்மதம் (ஆஸ்திகம்), இல் மதம் (நாஸ்திகம்) என்னும் வழக்கையும் நோக்குக.

மக்களாட்சியும் குடியரசும் நடைபெறும் இக் காலத்தில், ஒவ் வொருவர்க்கும் தத்தம் மதத்தைப் பரப்ப முழு வுரிமையுண்டு. ஆதலால், தஞ்சைப் பெரியார் படிமை யடித்தளத்தில், "கடவு ளில்லை கடவுளில்லை கடவுளென்ப தில்லையே" என்று பொறித் திருப்பதுபற்றியும், அப் படிமையைத் திறந்து வைத்த முதலமைச் சரைக் குறித்தும், ஓர் ஆரியக் கூட்டம் உவலை கூறுவது நச்சுத் தன்மையான குறும்புத்தனமே.