உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

தமிழர் மதம்

சேலம் மூடநம்பிக்கை யொழிப்பு மாநாட்டிலும், பெரியார் ஏவலால் வரைந்து காட்டப்பட்ட ஓவியங்கள், தொன்மங்களிற் சொல்லப்பட்ட செய்திகளே. அவ் வோவியங்களைப்பற்றிக் குமரிமுதல் பனிமலைவரை வீண் பேராரவாரம் செய்யப்பட்டது. அவற்றிற்கு மூலமான செய்திகளை நீக்கின், அவ் வோவியங்கள் தாமாக நீங்கிவிடும்.

இற்றை அறிவியற் போக்கு

இறைவ னின்றி எல்லாம் இயற்கையாகத் தோன்றிய தென் பதையே, அறிவியற் பொது அடிப்படையாக இக்காலத்துப் புதுப் புனை வாராய்ச்சியாளர் பலர் கொண்டுள்ளனர். தார்வின் (Darwin) கொள்பும் (theory) இதற்குத் துணையெனக் கருதுகின்றனர். ஆயின் தார்வினே தம் இறுதிக் காலத்தில் தம் இளமைக் காலக் கொள்பு பற்றி வருந்தினதாகத் தெரிகின்றது. தாழ்ந்த இனத்தினின்று உயர்ந்த இனம் படிமுறையாகத் தோன்றிற்று என வைத்துக்கொள்ளினும், அடிப்படையுயிரியான ஒற்றைப் புரையன் (unicellular being) எங்ஙனம் தானே தோன்றும்? சடத்தினின்று சித்துத் தோன்றுமோ? தோன் றாதே! ஆதலால், திரிபாக்கக் கொள்பு (Evolution theory) தவறென்றே கொள்ள வேண்டியுள்ளது. இனி, கதிரவனினின்று ஞாலம் வீழ்ந்த தெனின், கதிரவன் எதினின்று வீழ்ந்தது? இக் கொள்பாளர் கணக் கற்ற கதிரவக் குடும்பங்கள் பெரு விசும்பில் (Grand Universe) உள்ளதை அறிந்தாரா? அறிவியலாராய்ச்சியாளர் இயற்கையிலுள்ள, இறும் பூதுகளைக் கண்டு இறைவன் பெருமையை உணர்ந்து வியப்பதற்கு மாறாக, திறவுகோல் பெற்ற வேலைக்காரன் திருடனாக மாறி விடுவதுபோல், தனக்கு நுண்மதியளித்த இறைவனையே இல்லை யென மறுப்பது, விளக்கைப் பிடித்துக்கொண்டு கிணற்றில் விழுவது போன்ற தன்றோ!

"கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்.

(குறள். 2)

"மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தின் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதற் பூதம் பரத்தின் மறைந்தது பார்முதற் பூதமே

(திருமந்.2251)

காணப்பட்ட பொருள்களைப்பற்றியே கருத்து வேறுபாடி ருக்கும் போது, காணப்படாத கடவுளையும் மறுமையையும்பற்றிக் கருத்து வேறுபாட்டிற்கு மிகுந்த இடமிருப்பதால், கடவுளை நம்புகிறவரும் நம்பாதவரும் ஒருவரை யொருவர் குறைகூறாதும்