உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிபுரையியல்

161

வெறுக்காதும், உயர்திணைக்குரிய உடன்பிறப்பன்பு பூண்டொ ழுகல் வேண்டும்.

கடவுள் ஒருவரே யாதலால், கடவுள் மதத்தாரும் பல்வேறு கொள்கை கொண்டிருப்பினும், பொதுவாழ்வில் ஒரு தந்தை மக்கள் போல் ஒன்றுபடல் வேண்டும்.

மரக்கறி யுணவே சிறந்ததாயினும், புலாலுண்ணா அஃறிணை யுயிரினங்களும் புலான் மறுத்த மக்களும், ஓரறி வுயிர்க்கொலை செய்தே உண்ண வேண்டியிருப்பதனாலும், கண்ணப்பனார் ஊனுணவை இறைவன் கண்டிக்காமையாலும், முனைமண்டல (Po- lar Region) வாணர்க்கு மரக்கறியுணவு கிடையாமையாலும், புலாலுணவு பற்றியும் ஒருசார் மக்களை வெறுக்காதிருப்பது நன்றாகும்.

மெய்ப்பொருள் இருபத்தெட்டே. மனமொழிமெய்க் கெட் டாது எங்கும் நிறைந்து நுண்ம வடிவிலிருக்கும் ஒரே கடவுளை, ஐங்கூறாகவும் தொண்கூறாகவும் பகுப்பதும், பாலற்று நினைத்த மட்டில் எல்லாம் நிகழ்த்தவல்ல மாபெரும் பரம்பொருளை மாந்தனைப்போற் கருதி, அவனுக்கு வாழ்க்கைத் துணையும் ஐம்புதல்வர் குடும்பமும் தொழிற் றுணைவரும் சேர்ப்பதும், கடவுட் கொள்கைக்கு மாறான தெய்வப் பழிப்பேயாம்.

ஆரிய வேதத்திற்கும் இரு தமிழ மதங்கட்கும் யாதொரு தொடர்புமில்லை. ஆரியக் கூண்டுள் அடைபட்டிருக்கும் தமிழ னுக்கு, இம்மை விடுதலையும் மறுமை விடுதலையும் இல்லவே யில்லை.

இறைவனுக்கு ஏற்றது, எங்கும் என்றும் என்றும் உருவமின்றி நேரடியாய்ச் செய்யும் தாய்மொழி வழிபாடே.

ஆரிய வேடரின் அயர்ந்தனை மறந்தனை சீரிய மொழிநூல் செவ்விதி னுணர்த்தலின் மூரிய பெருமையை முற்று முணர்ந்தினே பூரிய அடிமையைப் போக்குவை தமிழனே.