உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

1. தமிழ்நாட்டரசின் திருக்கோவில் வழிபாட்டுச் சீர்திருத்தம்.

ஆரியர் வருமுன், குமரிநாட்டுச் சிவன் (சேயோன்) கோவில் களிற் குருக்கள் அல்லது பண்டாரம் என்னும் வகுப்பாரும், திருமால் கோவில்களில் நம்பிமார் என்னும் வகுப்பாரும், காளிகோவில்களில் உவச்சர் என்னும் வகுப்பாரும், பூசையும் பொதுவழிபாடும் தனித்தமிழில் நடத்திவந்தனர்.

திருக்கோவிற் பணிகளைக் கவனித்தற்கு, ஊர்தொறும் ஊரவைப் பிரிவான கோயில் வாரியம் என்னும் குழு விருந்தது. தலை நகர்களிலும் கோநகர்களிலும் உள்ள பெருங்கோவில்களில், அரசரின் நேரடி யாட்சிக் குட்பட்ட முதுகேள்வி (supervising officer), இளங்கேள்வி (subordinate supervising officer) என்னும் ஈரதிகாரிகள் இருந்துவந்தனர்.

நீண்ட காலமாக புன் சிறு தெய்வங்களையே போற்றி வந்த வரும் கடவுளியல்பை யறியாதவருமான ஆரியர், கி.பி. 5ஆம் நூற்றாண்டின் பின்னரே, மூவேந்தரையும் பல்வேறு வகையில் வயப் படுத்தி, 'ஆகமம்', 'சங்கிதை', 'தந்திரம்' என்னும் மூவகைத் தொழு மறைகளை இயற்றி, பிராமணரே திருக்கோவில்களில் வழிபாடு செய்து வருமாறு திட்டஞ் செய்துவிட்டனர். தமிழர் கோவில்களில் ஆரியராட்சி புகுந்தது, கறையான் புற்றிற் பாம்பு குடிகொண்டது போன்றதே.

சி

ஆதலால், எதற்கும் அஞ்சாதும் எவ் வெதிர்ப்பையும் பொ ருட்படுத்தாதும், பின்வருமாறு சீர்திருத்தங்களை உடனடியாகச் செய்வது தமிழ்நாட்டரசின் தலைமேல் விழுந்த தலையாய கடமை

யாம்.

(1) கோவில் வழிபாடு தமிழிலேயே நடைபெறல்.

(2) அவ்வம் மதநம்பிக்கையும் தெய்வப் பத்தியும் கல்வித் தகுதியும் பணிப்பயிற்சியும் தூய வொழுக்கமும் உள்ள,பல வகுப்பாரும் பூசகராக அமர்த்தப்பெறல்.