உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

163

(3) பூசகர் பதவியிலும் கையடைஞர் (Trustees) பதவியிலும் தொடர்மரபு (Hereditariness) நீக்கப்படல்.

(4) அறிஞரும் ஆராய்ச்சியாளரும் அறிக்கையாளரும் உயர் பதவியாரும் பெருமக்களும் அரசரும், திருவுண்ணாழிகை யல்லாத கோவிலகத்துட் புகவுச் சீட்டுப் பெற்று புகவிடல்.

(5) பெருங்கோவில்களின் வருமானத்தி லொரு பகுதியைப் பொது நலப் பணிக்குச் செலவிடல்.

(6) அறநிலையப் பாதுகாப்புத் துறை யமைச்சர் கடவுள் நம்பிக்கை யுடையவராயிருத்தல்.

(7) உருவிலா வழிபாட்டைப் படிப்படியாகப் பொது மக்களிடைப் புகுத்தல்.

கடவுள் எல்லார்க்கும் பொதுவான அன்பார்ந்த தந்தையாத லாலும், கணக்கற்ற உலகங்களையுடைமையாலும், அவருக்கு ஒரு தேவையுமின்மையாலும், அருமை மக்கள் போன்ற அனைத்துயிரும் இன்பமாக வாழ்வதே அவர் விருப்பாதலாலும், வாழ்க்கையினின்று மதத்தை வேறாகப் பிரிப்பதும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் கடவுள் இருக்கையான கோவிலுக்குட் புகுவதைத் தடுப்பதும், கோவிற் சொத்து கோவிற் பணிக்கே செலவிடப்பட வேண்டு மென்பதும், கடவு ளியல்பை அறியாதவரும் அவருக்கு மாறானவருமான தன்னல வகுப்பாரின் செயலாதலின் அதைப் பொருட்படுத்தாது பொதுநலப் பணியில் ஈடுபடல் வேண்டும். கோவிற்சொத்தைப் பிராமணர்க்கே செலவழிப்பின் திருப்பணியும், எல்லார்க்கும் பயன்படுத்தின் தெருப்பணியும் ஆகும் போலும்!

2. மதச் சமநோக்கு

சிவனியம், மாலியம், உலகியம் (லோகாயதம் அல்லது சார் வாகம்) என்னும் மூன்றே தொன்றுதொட்டு வழங்கும் தமிழ மதங் களாயினும், இன்று வெளிநாட்டு மதங்களும் தமிழரிடைப் புகுந் திருப்பதாலும், அம் மதத்தாரைத் தமிழரல்லர் என விலக்கல் கூடாமையாலும், இற்றை முறைப்படி சமணம், புத்தம், கிறித்தவம், இசலாம் என்னும் மதங்களையும் தமிழ்நாட்டு மதங்களாகவே கூறல் வேண்டும்.

உலகியம் ஒன்றுமட்டும் உலகம் முழுமைக்கும் தொன்று தொட்டுப் பொதுவாகும்.

மதங்களெல்லாம் தேவியம்(Theism) அல்லது உள்ளியம் (ஆஸ்திகம்), தேவிலியம்(Atheism) அல்லது இல்லியம்(நாஸ்திகம்) என