உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

தமிழர் மதம்

இருவகைப்பட்டிருப்பதால், மதவியல் வாயிலாக மக்களை ஒன்று படுத்தல் இயலாது. அதனாலேயே, இந்திய ஒன்றியமும்(Indian Union) மதவியலைத் தழுவாது உலகியலையே(Secularism) தழுவியுள்ளது.

ஆகவே, தாய்மொழி யொன்றே ஓரினப் பல மதத்தாரையும் ஒன்றாயிணைக்க வல்லதாம். ஆதலால், தமிழர் எம் மதத்தாராயினும் தமிழைத் தாய்போற் பேணிக் காத்தல் வேண்டும். தமிழ் என்பது தனித்தமிழே. அயல்நாட்டு மதம் என்னுங் கரணியத்தால், அயன் மொழிச் சொற்களை ஆளுதல் கூடாது. தமிழ்மொழிபற்றியே தமிழர் என்னும் இனம் அமைத்திருப்பதால், தமிழ்ச்சொல்லை வழங்காதார் தமிழராகார். அயல் நாட்டு மதம்பற்றிய அயன்மொழிச் சொற்களை யெல்லாம் தமிழில் மொழி பெயர்த்தாள வேண்டும். நேர்த் தென்சொல் ஏற்கெனவே யில்லாவிடின், புதுச்சொல் புனைந்து கொள்ள வேண்டும்.

மதம் என்பது, காணப்படாத மறுமை நோக்கிய தாதலால், எல்லா மதங்களையும் சமமாக நோக்குதல் வேண்டும். ஒவ்வொரு மதத்தார்க்கும் தம் மதத்தைப் பிறர்க்கெடுத் துரைக்க வுரிமை யிருப்பினும், அதுபற்றிப் பிற மதத்தாரை வெறுப்பதும் பகைப் பதும், மத நோக்கத்திற்கும் மாந்தன் தன்மைக்கும் முற்றும் மாறான தாகும்.

கடவுளிருப்பது உண்மையாயின், அவரை நம்புவாரையும் நம்பாதாரையும் அவரே மறுமையிற் கவனித்துக் கொள்வார். இம்மையைப் பொறுத்தமட்டில், எல்லாரும் உடன்பிறப்பாக ஒன்றி வாழல் வேண்டும். அதுவே உயர்திணை யென்னும் மக்கட்டன்மை. 3. மாந்த ரியற்கை வேறுபாட்டு விளக்கம்

மாந்த ரெல்லாரும் ஒரே திணையாயினும், நாகரிக வாழ்க்கை யில் உணவுமட்டுமன்றி, உடை, உறையுள், கருவி, தட்டுமுட்டு, ஊர்தி, மருந்து, இன்புறுத்தி, அறிவுநூல் முதலிய பல்வேறு பொருள்கள் தேவையா யிருப்பதால், அவற்றை யெல்லாம் உருவாக்குவதற்கு, அவர் அகக்கரணங்களும் புறக்கரணங்களும் இயற்கையிலேயே வெவ்வேறு வகைப்பட்டுள்ளன.

ரு

ஒவ்வொரு பொருளும் உழைப்பினாலேயே உருவாக்கப்படும். உடலுழைப்பும் மதியுழைப்பும் என உழைப்பு இருவகை. இருவகை யுழைப்பும் இன்றியமையாதனவே. உடலுழைப்பாளிகள் உடல் வலிமையராகவும் மதியுழைப்பாளிகள் மதிவலிமையராகவும் பிறக்கின்றனர். இது இறைவன் ஏற்பாடு. இதையே ஊழ் (விF) என்பர்.

து