உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

165

எல்லாரும் மதிவலியராயின் உடலுழைப்பு நடைபெறாது. இதை, “எல்லாரும் பல்லக் கேறினால் எவர் தூக்குவது?” என்னும் பழமொழி உணர்த்தும். ஆயின், உடலுழைப்பாளியரைத் தாழ்வாகக் கருதுவதும், அவர்க்கு வேண்டிய வாழ்க்கைத் தேவைகளைத் தர மறுப்பதும், கொடுமையும் அஃறிணைத் தன்மையும் ஆகும். உடலுழைப்பாளியரையும் உடன்பிறப்புப்போற் கருதி மதிக்க வேண்டுமென்பதையே,

யாதும் ஊரே யாவரும் கேளிர்

நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர் முறைவழிப் படூஉம் என்பது திறவோர் காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்

பெரியோரை வியத்தலு மிலமே

சிறியோரை யிகழ்தல் அதனினு மிலமே'

""

என்று பாடி அறிவுறுத்தினார் கணியன் பூங்குன்றனார்.

(புறம்.192)

உடலுழைப்பாளியர் தம் உரிமையைப் பெறும்பொருட்டே, காரல் மார்க்கசுவும் பிரெடிரிக்கு எஞ்சல்சுவும் சென்ற நூற் றாண்டில் தோற்றுவிக்கப்பட்டனர்.

இனி, அகக்கரணமும் புறக்கரணமும், மீண்டும் வெவ்வேறு தொழிற்பிரிவிற் கேற்றவாறு, பல்வகை நுட்ப வேறுபாடுன யனவாய்ப் பிறப்பில் அமைகின்றன. இதன் விளக்கத்தை யெல்லாம், என் மண்ணில் விண் என்னும் நூலிற் கண்டு தெளிக. ஈண்டு விரிப்பிற் பெருகும்.

எல்லா மக்களும் வெவ்வேறு தொழிலும் வினையுஞ் செய்து உடன் பிறப்புப்போற் கூடி வாழ்தற்கே, அவர் உடல் உளம் மதி முதலி யன வெவ்வேறு திறம்பட இறைவனாற் படைக்கப்பட்டுள்ளன.

இனி, உணவு, தட்பவெப்ப நிலை, பழக்கவழக்கம், பயிற்சி முதலியவற்றாலும், தொடர்மரபினாலும் (heredity), இருவகைக் கரண வலியும் மேன்மேலும் வளர்க்கப்படுவனவாயு முள்ளன.

மாந்தனுக்குப் பகுத்தறிவும் தன்விருப்பச் செயலுரிமையும் அளிக்கப்பட்டிருப்பதால், அவன் தன் வலிமையை வளர்ப்பதும் தளர்ப்பதும் அவனையே பொறுத்துள்ளன. தீய அல்லது தகாத வாழ்க்கையால் ஒருவன் தன் வலிமையைக் கெடுத்துக்கொள்ளின், தன் வழியினர் வலிமையையுங் கெடுத்தவ னாகின்றான்.