உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

தமிழர் மதம்

"சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனுங் குறளும் ஊமுஞ் செவிடும் மாவும் மருளும்"

""

(புறம்.28)

ஆகிய எண்வகை எச்சப் பிறவியும், குறுவாழ்வும், கொடுநோயும், தீய மனமும், முன்னோர் தவற்றாலும் நேரலாம். அத்தகைத் தொல்வரவுப் பேறு எத்தனை தலைமுறை தாண்டியும் நேர்தல் கூடும்.

இனி, செல்வமும் வறுமையும் போன்றே, மனத்தூய்மையும் மனத் தீமையும், இயற்கைச் சேதமுங் கொள்ளை நோயும், அரசியல் தவற்றாலும் நேரும்.

ஆதலால், பிறவியிலமையும் தீய நிலைமைகட்கும் இயற்கை யில் நேரும் துன்ப நேர்ச்சிகட்கும், இறைவனே கரணியமாகான் என்பதை அறிதல் வேண்டும்.

"இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு.

(குறள்.374)

ஆதலால், தெள்ளிய அறிஞர் செல்வ ராவதில்லை. அதற்கு ஆசையின்மையும் பண்புடைமையுமே கரணியம். சோம்பேறிகள் முயற்சியின்மையால் வறுமையடைகின்றனர். அதனால்,அவர் மக்கள் வறியராய்ப் பிறக்கின்றனர். முயற்சியுடையார் வறியராதற்கு அரசியல் தவறே கரணியம்.

தனிப்பட்டவர் நோயுறுவதற்குத் தன் தவறோ, முன்னோர் தவறோ, தெய்வத் தண்டனையோ கரணியமா யிருக்கலாம். நல்லார் நோயுறுவதற்கு இறைவன் தடுத்தாட் கொள்ளலும் கரணியமாகும்.

இயற்கைச் சேதத்தால் ஓர் ஊர் அல்லது நாட்டார் அழிவது பெரும்பாலும் தெய்வத் தண்டனையே. உலகம் முழுவதும் அழிவது இறைவன் அழிப்புத் தொழில். அது மக்கள் மிகையால் அல்லது இழுக்கத்தால் நேர்வது.