உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

1. மதம் என்னும் சொல் வரலாறு

ஆறு, நெறி, கொள்கை, மதம், சமயம் என்பன ஒருபொருட் சொற்கள். இவற்றுட் பின்னிரண்டும் வடமொழியென்னும் சமற் கிருதத்திலும் வழங்குவதாலும், அம் மொழி பிறமொழியினின்று கடன் கொள்ளாத தேவமொழி யென்னும் நம்பிக்கை இடைக்காலத் தமிழருள்ளத்திற் பதிக்கப்பட்டிருந்ததனாலும், அவ்விரு சொல்லும் வடசொல்லே யென்று இன்றும் கருதப்பட்டு வருகின்றன.

66

முத்துதல் = 1. பொருந்துதல் அல்லது சேர்தல். “ திருமுத்து ஆரம் = திருமகள் சேரு மாரம்; “கழைபோய் விண்முத்தும்” என்றாற் போல" (சீவக. 504, நச். உரை). 2. மென்மையாகத் தொடுதல். 3. முத்த மிடுதல். "புதல்வர் பூங்கண் முத்தி” (புறம். 41)

முத்து - முட்டு. முட்டுதல் = 1. வன்மையாகத் தொடுதல், மோதுதல். “துள்ளித்தூண் முட்டுமாங் கீழ்”(நாலடி. 94). 2. முட்டித் தாங்குதல். 3. முடிதல். " முட்டடி யின்றிக் குறைவுசீர்த் தாகியும்" (தொல். பொருள். 435). க. முட்டு.

தகரம் மென்மையையும் டகரம் வன்மையையும் உணர்த்தும். ஒ,நோ :ஒத்து ஒட்டு, குத்து குட்டு. முட்டு = தாக்கு, பொருத்து,

முடிவு.

-

முட்டுமட்டு = முடிவு, அளவு. முத்து - மத்து = அளவு. மத்து

மத்திமதி.

மதித்தல்

=

1. அளவிடுதல். "மண்விழைந்து வாழ்நாண் மதியாமை” (திரிகடு. 29). 2. கருதுதல். “ஆடலை மதித்தான்” (கந்தபு. திருவிளை. 1). 3. பொருட்படுத்துதல். “மண்ணாள்வான் மதித்து மிரேன்" (திருவாச. 5 : 12).

மதி = அளவிடப்பட்ட பண்டம். எ - டு : ஏற்றுமதி, இறக்குமதி.

-

மதி மதிப்பு = 1. அளவிடுகை. 2. பொருட்படுத்துகை, கண் ணியப்படுத்துகை. “உமையைச் சால மதிப்பொழிந்த வல்லமரர் மாண்டார்" (தேவா. 1014 : 7). 3. கருத்து. "மண்ணுல காளு மதிப்பை