உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

தமிழர் மதம்

யொழித்தே” (பிரமோத். 8: 99). 4. தோராயம். 5. கண்ணியம். தெ.

மதிம்பு.

-

மதி மதம்

= 1. பெரிதாக மதிப்பது. 2. கருத்து. 3. கொள்கை. 4. நெறிமுறை. 5. சமயம். “தத்த மதங்களே யமைவதாக" (திருவாச.

4 : 52). வ. மத (mata).

மத என்னும் சமற்கிருதச் சொல்லை மன் என்னும் மூலத்தி னின்று திரிப்பர். மன் என்பதினின்று, மான், மா, மானம் முதலிய சொற்கள் பிறக்குமேயன்றி மதி அல்லது மதம் என்னும் சொல் தோன்றாது.

-

கடைதலைக் குறிக்கும் மதி என்னும் வினைச்சொல்லும், மத்து என்னும் வடிவினின்றே திரிந்திருத்தலை நோக்குக. முத்து - மொத்து மத்து = மொத்தையாக விருக்கும் கடைகருவி.

மத்து - மத்தி. மத்தித்தல் = மத்தினாற் கடைதல். மத்தி - மதி. மதித்தல் = 1.கடைதல். “மந்தரங் கொடு மதித்த நாள்" (சேதுபு. சங்கர. 20). 2. கடைதல்போல் விரலா லழுத்தி மசியச் செய்தல். மதி -மசி. மசிதல் = கடைந்ததுபோற் களியாதல். குழந்தைக்குச் சோற்றை மதித்து ஊட்டு என்னும் வழக்கை நோக்குக.

மத்து என்னும் பெயரை மந்த (mantha) என்றும், மத்தித்தல் என்னும் வினையை மத் (math) என்றும், சமற்கிருதத்தில் திரித்திருக் கின்றனர். இவற்றிற்கு வேர் தமிழிலேயே யன்றி வடமொழியிலில்லை.

அளத்தற் பொருள் குறித்த mete என்னும் ஆங்கில வினைச் சொல் கவனிக்கத் தக்கது. E. mete (to measure), OE., OS . metan, ON. meta. Goth. mitan, OHG mezzan.

-

E .meter = person or thing that measures. Metron (measure) என்னும் கிரேக்கச் சொல் மாத்திரை என்பதன் திரிபு. மா மாத்திரம் - மாத்திரை-வ.மாத்ரா. மாத்தல் (அளத்தல்) என்னும் வினை தமிழில் வழக்கற்றது.

در

எழுவகை மதமே உடன்படல் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தனாது நிறுப்பே இருவர் மாறுகோள் ஒருதலை துணிவே பிறர்நூற் குற்றங் காட்டல் ஏனைப்

பிறிதொடு படா அன் தன்மதங் கொளலே

""

(1560T. 11)

என்னும் நூற்பாவினின்று, ஒரு பொருள் அல்லது நெறிமுறை (prin- ciple) இன்னவாறிருத்தல் வேண்டுமென்று மதித்துக் கொள்வதே மதம் என்றும், சமயம் மதமென்னும் பெயர் பெற்றதும் இவ்வகை யிலேயே என்றும், அறிந்து கொள்க.