4
தமிழர் மதம்
அமை - அவை = கூட்டம்.
அமை அமையம் = பொருந்தும் நேரம், ஏற்ற வேளை, தக்க - செவ்வி, வினை நிகழும் சிறுபோது.
அமை -சமை. சமைதல்
ஆக்கப்படும் அரிசி போலும்
பூப்படையும் கன்னி போலும் நுகர்ச்சிக் கேற்றதாதல், பதனடைதல், இனிதாகச் செய்பொருள் வினை முடிதல், அணியமாதல்.
சமையல் = சோறு குழம்பாக்கும் வினை.
“சக்கிலியப் பெண்ணும் சாமைக் கதிரும் சமைந்தால் தெரியும்.' (பழமொழி)
சமை சமையம் = பதனடைந்த அல்லது நுகர்ச்சிக் கேற்ற நிலை, வினைக்குத் தக்க வேளை.
சமையம் சமயம் = ஆதன் (ஆன்மா) தான் இறைவனை அடைதற்கு அல்லது பேரின்பத்தை நுகர்தற்குத் தன்னைத் தகுதிப் படுத்தும் முக்கரண வொழுக்கம்.
பொருளை வேறுபடுத்தற்கு, சொல்லிடை மகர ஐகான் அகர மாயிற்றென அறிக.
வடமொழியாளர், சமயம் என்னும் தென்சொல்லை ‘ஸமய’ என்று திரித்தும், ஸம் + அய என்று பிரித்தும், உடன் வருதல் (to come together) அல்லது ஒன்றுசேர்தல் என்று பொருள் கூறி வடசொல்லாகக் காட்டுவர். அங்ஙனங் காட்டிய பின்பும்,
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும் '
(குறள்.380)
என்னுந் திருவள்ளுவர் திருவாய்மொழிக் கேற்ப, அவ் வடசொல் தென் சொற் றிரிபேயாதல் காண்க.
ஸம் = உடன், கூட. அய = செல்கை, வருகை.
'அய' என்னும் சொற்கு, 'அய்' என்பதை அடியாகவும் 'இ' என்பதை வேராகவும் காட்டுவர். இ -அய் - அயன் = செலவு.
தமிழில், கூடுதலைக் குறிக்கும் அடிச்சொற்களுள் கும் என்பது ஒன்று. கும்முதல் = கூடுதல், குவிதல்.
-
-
கும் கும்மல். கும் கும்பு-கும்பல்.
கும் - குமி - குமியல். குமி - குவி - குவியல்.
கும்மல் - L.cumulus = heap; cumulare = to heap up, E. cumulate, accumulate.