உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் மதம்

கும் - கும்ம (நிகழ்கால வினையெச்சம் - Infinitive Mood) = FnL. கூடுதல் = ஒன்றுசேர்தல், மிகுதல்.

கூட (to gather) என்னும் (நி.கா.) வினையெச்சம், உடன் (together, with) என்று பொருள்படும்போது, மூன்றாம் வேற்றுமை உடனிகழ்ச்சி யுருபாகவும், முன்னொட்டாகவும் (prefix) ஆளப்படும்.

எ-டு : தந்தைகூட வந்தான்

=

தந்தையுடன் வந்தான்.

கூடப் பிறந்தான் = உடன்பிறந்தான்.

கூடுதலைக் குறிக்கும் கும் என்னும் வினைச்சொல், உ - திரிபு முறைப்படி கம் என்று திரியவுஞ் செய்யும்.

"கமம் நிறைந் தியலும்

நிரைதல் = நிரம்புதல், மிகுதல், கூடுதல்.

Cum என்னும் இலத்தீன அடிச்சொல்லும், முன்னொட்டாகும் போது com என்று திரிந்து, வருஞ்சொன் முதலெழுத்திற் கேற்ப con, col, cor என்று ஈறுமாறும். சில எழுத்துகட்கு முன் co என்று ஈறு கெடவுஞ் செய்யும். இங்ஙனமே ஆங்கிலத்திலும்.

இங்ஙனம் இலத்தீனத்தில் கும்கொம் என்றும், ஆங்கிலத்திற் கம் என்றும் திரியும் முன்னொட்டு, கிரேக்கத்தில் ஸும் (sum) என்றும் ஸிம் (sym) என்றும், சமற்கிருதத்தில் ஸம் (sam) என்றும் திரியும். கிரேக்க முன்னொட்டும், இலத்தீன முன்னொட்டுப்போற் பின்வரும் எழுத்திற் கேற்ப, சின் (syn), சில் (syl) என்றும் திரியும். சமற் கிருத முன்னொட்டு ஈறுகெட்டு ஸ (sa) என்றும் நிற்கும்.

இவற்றிற் கெல்லாம், கூட (உடன்) என்பதே பொருள்.

-

-

கூட என்பதற்கு நேரான கும்ம என்னும் தென்சொல்லே, முன்னொட்டாகிக் கும் என்று குறுகியும், கும் கொம் கம், கும் - ஸும், ஸும் - ஸும் என்று திரிந்தும், ஆரிய மொழிகளில் வழங்கும் என அறிக. அதன் முதன்மெய், ஐரோப்பாவின் வடமேற்குப் பகுதியிலும் மேற்குப்பகுதியிலும் இயல்பாகவும், அதன் தென் கிழக்குப் பகுதியிலும் இந்தியாவிலும் ஸகரமாகத் திரிந்தும், வழங்கு வதை ஊன்றி நோக்கி வரலாற்றுண்மை தெளிக.

இனி, இந்திய ஆரியத்தில் (வேதமொழியிலும் சமற்கிருதத் திலும்) செல்லுதலைக் குறிக்கும் ‘இ’ என்னும் வேரும் 'அய்' என்னும் அடியுமாகிய வினைச்சொற்களும், உய் என்னும் தென்சொல் லினின்று திரிந்தவையே.

ஊ அல்லது உ, இதழ் குவிந்தொலித்து முன்னிடத்தை அல்லது முன்னிற்பதைச் சுட்டும் முன்மைச்சுட்டு.

5