உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

விற்கொண்ட வாணுதலாள் வேலி தருங்கூலி

தமிழர் மதம்

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே

என்ற பாட்டைப் பாடவும், அது விழாது நின்றுகொண்டது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், கரூரில், ஒரு நெடுஞ்சாலை யைச் சற்று மறித்துக்கொண்டிருந்த ஒரு நூறாட்டை வேப்ப மரத்தை, வெட்டி விடும்படி உத்தரவாயிற்று. அதிற் பேயிருக்கின்ற தென்று ஒருவரும் வெட்ட முன்வரவில்லை. கூலி அதிகமாகத் தருவதாகச் சொல்லி அதிகாரிகள் வற்புறுத்தியதன்மேல், துணிந்து வந்த இரண்டொருவரும், கோடரியால் ஒரு வெட்டு வெட்டின வுடன் பின்வாங்கிக் காய்ச்சல் கண்டு, வீட்டிற் படுத்துக் கொண் டனர். அதன்பின் அச்சம் அதிகரித்தது. கூலியை எத்துணை உயர்த் தினும் வெட்ட ஒருவரும் இசையவில்லை. அதன் பின், திருச்சிராப் பள்ளித் தண்டலாளரான ஆங்கிலத் துரை, ஓர் 24 மணி நேர வெளியேற்றக் கட்டளைச் சீட்டில் தாம் கையெழுத்திட்டு, அம் மரத் தில் ஒட்டச் சொல்லிவிட்டு, மறுநாள் தாமே சில வேலைக்காரரைக் கொண்டுவந்து வெட்டச் சொன்னார். மரம் விரைந்து வெட்டப் பட்டது. ஒருவருக்கும் ஒன்றும் நேரவில்லை.

பேய்களையும் பூதங்களையும், கல்லிலும் சுதையிலும் சிறிதும் பெரிதுமாக அஞ்சத்தக்க முகத்துடன் மாந்தனைப் போன்ற படிவஞ் சமைத்தும், கற்றூணில் உருவஞ் செதுக்கியும், சுவரில் ஓவியம் வரைந்தும், உடம்பு வடிவின்றி மண்ணிலும் சுதையிலும் பட்டைக் கூம்பாக அமைத்தும், உருவ வணக்கஞ் செய்துவந்தனர் பண்டையர். (2) கடிமரம்

கடிமரம் என்பது, ஒவ்வொரு குறுநில மன்னனும் பெருநில வேந்தனும், கொடியும் முத்திரையும் போலத் தன் ஆள்குடிச் சின்னமாகக் கொண்டு, பகைவர் வெட்டாதவாறும் அவர் யானையை அதிற் கட்டாதவாறும், காத்து வந்த காவல்மரம். கடைக்கழகக் காலத்தில், கடிமரம் ஓர் அரசச்சின்னம் போன்றே கருதப்பட்ட தாயினும், முந்துகாலத்தில் அது அரசக் குடியைக் காக்கும் தெய்வமாகவே வணங்கப்பட்டிருத்தல் வேண்டும். பண்டைக்காலக் கடிமரங்களுள் கடம்பு ஒன்று. அதைக் கொண்ட வர் கடம்பர்.

பிற்காலத்தில் அரசமரம் தெய்வத்தன்மை யுள்ளதாகப் பொது மக்களாற் கருதப்பட்டதும், பிள்ளைப்பேறு வேண்டிய பெண்டிர் அரசமரத்தைச் சுற்றி வந்ததும், “அரசமரத்தைச் சுற்றிவந்ததும் அடிவயிற்றைத் தொட்டுப் பார்த்தாளாம்” என்னும் பழமொழியும், இக்கொள்கையை வலியுறுத்தும்.