உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

15

சதுப்பு நிலங்களில் அழுகற் பொருளினின்று கிளம்பும் ஆவியம் (gas), இரவில் ஒளிவிட்டு எரிவதுண்டு. அதைக் கண்டு கொள்ளிவாய்ப் பேய் (ignis fatuus, jack-o-lantern,will-o'-the-wisp,fen-fire) என்பது அறியாமைபற்றியதாகும்.

இராக் காலத்தில், காற்றினால் அண்மையிலுள்ள மரக்கிளை வளைந்து கதவின்மேற் படுவதைப் பேய் தட்டுவதாகவும், நிலவொளி யில் அசையும் மரக்கிளையின் நிழல் பலகணி வழியாய் அறைக்குள் விழுவதைப் பேய் குதிப்பதாகவும், கருதுவது ஆய்ந்து பாராமையின் விளைவாகும்.

பேய் என்னும் சொல், அச்சுறுத்துவது என்றும் அஞ்சுவது என்றும் பொருள்படும்.

பேம்நாம் உரும்என வரூஉங் கிளவி ஆமுறை மூன்றும் அச்சப் பொருள். பே - பேம். பே - பேய்.

""

(தொல்.உரி.67)

“அஞ்சினவன் கண்ணிற்கு ஆகாய மெல்லாம் பேய்”, “அஞ்சின வனுக்கு அகப்பைக் கணையும் பேய்", "அரண்டவன் கண்ணிற்கு இருண்டதெல்லாம் பேய்” என்னும் பழமொழிகள், அச்சத்தினா லேயே பல பேய்கள் படைத்துக் கொள்ளப்படும் உண்மையைத் தெரிவிக்கும்.

இனி, உண்மையான சில பேய்களும், அஞ்சுவாரைக் கண்டு அச்சுறுத்துவதும், அஞ்சாதாரைக் கண்டு விலகிப்போவதும் உண்டு. இதையே, "ஆளைக் கண்டு ஏய்க்குமாம் ஆலங்காட்டுப் பேய்” என்னும் பழமொழி உணர்த்தும்.

ஒரு சத்திரத்திலிருந்த அரசகுலப் பெண்பேய், அங்கு வந்து தங்கியவரை யெல்லாம் துன்புறுத்தியதுபோல், ஒளவையாரையும் நாற்சாமத்திலும் துன்புறுத்த வந்தது. அவர் ஒவ்வொரு சாமத்திலும் ஒவ்வொரு வெண்பாப் பாட, அது ஓடிப் போயிற்று.

ஓர் ஊரில் தலைவியா யிருந்த வேலி என்பவள், ஓர் இடிந்த மண்சுவரைக் கட்டுவிக்கப் பலமுறை முயன்றாள். அதிலிருந்த ஒரு பிராமணப் பேய், கட்டி முடித்த ஒவ்வொரு முறையும், கட்டின வனுக்குக் கூலிகொடுக்கு முன், அதை இடிந்து விழச் செய்தது. கடைசியிற் கம்பர் வந்து கட்டி முடித்துக் கூலி வாங்கிய பின், அது விழவிருக்குங் குறிப்பை யறிந்து,

'மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட் டிங்குவந்தேன் சொற்கொண்ட பாவின் சுவையறிவா ரீங்கிலையே