உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

தமிழர் மதம் தலைவியாகிய காளிக்குக் கட்டுப்பட்டும் பத்தினிப் பெண்டிர்க்கும் தூய துறவியர்க்கும் அஞ்சியும் ஒழுகும் கடப்பாடுண்டென்பதும், இப் பகுதியால் அறியப்படும். பேய்கள் பட்டப்பகலிலும் கனவுடம்பு கொண்டு பாதம் நிலத்திற் பதிய நடக்குமென்பதை, பழையனூர் நீலி கதையும் மெய்ப்பிக்கும். அல்லாக்கால், வணிகனை மட்டுமன்றி ஊராரையும் ஊர்முதலிகளாகிய எழுபது வேளாளரையும், நீலிப் பேய் ஏமாற்றியிருக்க முடியாது.

பேய்கட்கும் பூதங்கட்கும், கள்ளும் இறைச்சியும் படைப்ப தும் கடாவும் சேவலும் காவுகொடுப்பதும், கல்வியும் பண்பாடுங் குன்றிய பொதுமக்கட்குக் களிப்பையும் ஊக்கத்தையும் ஊட்டு வனவாயிருந்தன.

சில சமையங்களிற் புதைய லெடுக்கவும், கிணறு வெட்டவும், கட்டடங் கட்டவும், நரக்காவு கொடுக்கவேண்டிய தாயிற்று. "புதை யலைப் பூதங் காத்தாற் போல்”, “கிணறு வெட்டப் பூதம் புறப்பட் டாற் போல்" என்னும் உவமைப் பழமொழிகள் கவனிக்கத்தக்கன.

தீய ஆவிகள் சிறுபிள்ளைகளைத் தீண்டாவாறு, அவர்களின் தலையுச்சியில் அரைத்த வெண்சிறுகடுகை அப்பி வந்தனர்.

போரிற் புண்பட்ட மறவரைப் பேய்கள் அண்டாவாறு, பெண்டிரும் உறவினரும், வேப்பங் குழையை வீட்டிற் செருகியும், மையிட்டும், வெண்சிறுகடுகு தூவியும், நறும்புகை காட்டியும், காஞ்சிப்பண் பாடியும் காத்தனர் என்பது,

"தீங்கனி யிரவமொடு வேம்புமனைச் செரீஇ வாங்குமருப் பியாழொடு பல்லியங் கறங்கக் கைபயப் பெயர்த்து மையிழு திழுகி

ஐயவி சிதறி ஆம்ப லூதி

இசைமணி யெறிந்து காஞ்சி பாடி

நெடுநகர் வரைப்பிற் கடிநறை புகைஇக்

காக்கம் வம்மோ காதலந் தோழி

வேந்துறு விழுமந் தாங்கிய

""

பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே

(புறம்.281)

என்னும் பாட்டால் அறியப்படும்.

""

"கடிப்பகைக்குத் தாதகியங் கண்ணியோ அம்மானே என்று, புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத்தரை வெட்டிப் பாடி வேம்பின் சிறப்பை நாட்டியது இங்குக் கவனிக்கத் தக்கது.

பேய் என்னும் ஆவியினம் இருப்பது உண்மையேயாயினும், அறியாமையினாலும் ஆய்ந்து பாராமையினாலும், பேயல்லாத வற்றையும் பேயென்று மயங்கி யுணர்வது மாந்தரியல்பாக வுள்ளது.