உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

13

தொடர்ந்தது. இறந்தான்குறி(Necromancy) கேட்கும் இடமும் இன்று சிலவுள்ளன.

கடைக்கழகக் காலத்தில் பேயனார் என்றொரு புலவரும், பேய்மகள் இளவெயினி என்றொரு புலத்தியாரும் இருந்தனர். பேயாழ்வார், பூதத்தாழ்வார் என்று இறைவனடியார் பெயர்களும் அடுத்து வழங்கின. பேயன், பேய்ச்சி என்னும் இயற்பெயர் தாங்கிய மக்களை, இன்றும் நாட்டுப்புறத்திற் காணலாம்.

பண்டைக்காலத்திற் பேய்களே பெருவழக்காகப் பொதுமக்க ளால் வணங்கப்பட்டதனாலும், சில பேய்கள் நன்மையே செய்வன வாக இருந்ததனாலும், பேய்க்கு நாளடைவில் தெய்வம் என்னும் பெயரும் ஏற்பட்டது.

در

'கானுறை தெய்வம் காதலிற் சென்று நயந்த காதலின் நல்குவன் இவனென வயந்த மாலை வடிவிற் றோன்றிக் கொடிநடுக் குற்றது போல ஆங்கவன் அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீ ருகுத்து வாச மாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்

கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன்

மாதவி மயங்கி வான்துய ருற்று

மேலோ ராயினும் கீழோ ராயினும்

பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும் பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும்

கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச் செவ்வரி யொழுகிய செழுங்கடை மழைக்கண் வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும் தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின் மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது

எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச் சாத்தொடு போந்து தனித்துய ருழந்தேன்

பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென"

(சிலப். 11 : 171-91) என்பதிற் பேய்மகள் தெய்வம் எனப்பட்டமை காண்க. இனி, பேய்கட்கு எல்லாச் செய்தியும் தெரியுமென்பதும், எவ்வடிவுங் கொள்ள இயலுமென்பதும், பொருத்தமாகப் படைத்து மொழியுந் திறனுண் டென்பதும், நொய்ய வுடம்பன்றிக் கனவுடம்பும் இரவும் பகலும் எடுக்கவும் கானிலந் தோய நடக்கவும் கூடு மென்பதும், தம்