உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

தமிழர் மதம்

கொல்லிமலை அப் பெயர் பெற்றது ஒரு தாக்கணங்கினா

லேயே. கொல்வது கொல்லி.

CC

'உரைசா லுயர்வரைக் கொல்லிக் குடவயின்

தேனுடை நெடுவரைத் தெய்வ மெழுதிய

வினைமாண் பாவை

""

(நற்.185)

இதனுரையில், 'கொல்லிப்பாவை - அம் மலையிலுள்ள தேவ ரையும் முனிவரையுந் துன்புறுத்த வருகின்ற அவுணரும் அரக்கரும், அப் பாவையின் நகையைக் கண்டு மயங்கி உயிர்விடும்படி, தேவதச் சனாக்கி வைத்த பெண் வடிவினது. அவுணரும் அரக்கரும் போதரு காலை, அவர் வாடை பட்டவுடன் தானே நகைசெய்யுமாறு பொறி யுள் வைக்கப்பட்டது. அது நகைத்துக் கொல்லுமென்பதனை,

திரிபுரத்தைச்

செற்றவனுங் கொல்லிச் செழும்பா வையுந் நகைக்கக்

கற்றதெல்லா மிந்தநகை கண்டேயோ

""

(சித்திரமடல்) என்றதனாலு மறிக" என்று, பின்னத்தூர் அ.நாராயண சாமி ஐயர் குறித்திருப்பதைக் காண்க. அவுணரையும் அரக்கரையும் கொல்லத் தேவதச்சன் புனைந்த பொறிவினைப் பாவை என்னுங் கொள்கை, ஆரியத் தொல்கதை தோன்றிய பிற்காலத்தது. அது கொல்லி யணங்கின் பேரழகையும் கொல்லுந் திறத்தையும்பற்றிய உயர்வு நவிற்சியே. மக்கள் அவ்விடத்தை யணுகாவாறு எச்சரித் தற்கே. அவ்வணங்கின் படிமை அங்கு வைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.

அணங்கை இன்று 'மோகினி' என்னும் வடசொல்லாற் குறிப்பர்.

மாந்தர்க்கு அறியாமையும் அச்சமும் மிக்கிருந்த முதற் காலத்தில், பேயாட்சியும் மிக்கிருந்தது. அக்காலத்து மதம் பேய் மதமே. பேயாடிகளும் பேயோட்டிகளும் பேய்மந்திரிகரும் பெருமதிப்புப் பெற்றிருந்தனர். ஒருவரைப் பிடித்த பேயோட்டவும், நோய் நீக்கவும், ஒருவரை நோய்ப்படுத்தவும் வாய்கட்டவும் இயக்கந் தடுக்கவும் விரும்பிய இடத்திற்கு வருவிக்கவும் வசியஞ்செய்யவும் சாவிக்கவும், ஒருவர்மீது பேயேவவும், ஒருவருடைமையை மறைக் கவும் அழிக்கவும், சண்டையிலும் கலகத்திலும் போரிலும், வெற்றி தரவும், இறந்தோரைப் பேசுவிக்கவும், தம்மால் இயலு மென்று பேய் மந்திரிகர் தருக்கினர்.

இன்றும், பேயோட்டல் பெருவழக்கமாகவும், வசியமுஞ் செய் வினையும் அருகிய வழக்காகவும், இருந்துவருகின்றன. குறளி யேவல் சில செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டது. போர் வெற்றிக்கு மந்திரிகரைத் துணைக்கொள்வது, திப்பு சுல்தான் காலம்வரை