உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

தமிழர் மதம்

என்னப்பட்டான். இவ் விருந்தோம்பற் பண்பு வழிவழி வளர்ந்து வந்ததனால், "வேளாளன் என்பான் விருந்திருக்க வுண்ணாதான் என்னுங் கொள்கை நிலைத்து விட்டது.

இம்மையில் இல்லத்திலிருந்து அறஞ் செய்து வாழ்பவன், மறுமையில் தேவனாய்ப் பிறப்பது திண்ணம் என்பதை உணர்த் தற்கே,

"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்.”

என்றார் திருவள்ளுவர்.

(குறள்.50)

இல்லறத்தைச் சிறப்பாக நடத்தும் பொதுமக்களான வேளாளர், மறுமையில் தேவருலகில் தேவராகத் தோன்றுவா ரெனின், இம்மையில் வேந்தனாக விருந்து அறவாழ்க்கை நடத்தி னவன், மறுமையில் தேவர் கோனாய்ப் பிறப்பான் என்னும் கொள் கையும் எழுந்தது. அதனால், தேவர் கோனைத் தேவர் வேந்தன் என்றனர். அப் பெயர் பின்னர் வேந்தன் என்றே குறுகி வழங்கிற்று.

"வேந்தன் மேய தீம்புன லுலகமும்

என்று தொல்காப்பியம் கூறுதல் காண்க.

(951)

வேந்தன் வணக்கம் குமரிநாட்டிலேயே தோன்றிவிட்டதனால், முதற் பாண்டியனே வேந்தனாகக் கொள்ளப்பட்டிருத்தல் வேண் டும். அவனுக்குப் படை வயிரவாள்; ஊர்தி வெள்ளை யானை.

தேவநிலையங்கட்குக் கோட்டம் என்று பெயரிருப்பினும், கோவில் என்னும் பெயரே உலக வழக்காகவும் பெரும்பான்மை யிலக்கிய வழக்காகவும் வழங்கற்கு, வேந்தன் வணக்கமே கரணியமா யிருந்திருத்தல் வேண்டும். கோ அரசன். இல் = மனை. கோ + இல் = கோவில் - கோயில்.

=

உழவுத்தொழிற்கு இன்றியமையாத மழை விண்ணிலிருந்தே பெய்வதால், விண்ணுலக வேந்தன் மழைக்கு அதிகாரியானான். ஆண்டு தோறும் வேந்தன் விழா மூவேந்தர் நாட்டிலும் கொண் டாடப்பட்டது. அதை வேந்தரே நடத்தி வந்தனர். சிவ மதமும் திருமால் மதமும் தோன்றியபின், வேந்தன்விழாப் படிப்படியாகக் கைவிடப்பட்டது. இறுதியாக அதை நடத்திவந்தவர் புகார்ச் சோழரே. ஆரியர்(பிராமணர்) தென்னாடு வந்தபின், வேந்தன்விழா வடநாட்டிற் போன்றே இந்திரவிழா எனப்பட்டது.

அரசன் செங்கோலாட்சி செய்தால், ஆண்டுதோறும் தப்பாது மழை பெய்யும் என்பது பண்டையோர் நம்பிக்கை. செங்கோ லாட்சியிலும் மழை பெய்யாது பயிர்கள் தீயின், அதற்குக் கொடுந்