உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

27

தீயவனாயிருந்தவனே கரணியமென்று அவனைக் கட்டியிழுத்து எரிப்பது வழக்கம். இன்று அஃதியலாமையால், சூந்து கட்டியிழுத் தெரிக்கின்றனர் பாண்டிநாட் டுழவர்.

நெய்தல் தெய்வம்

நெய்தல்நில மக்கள், கடல் மீன்பிடித்தும், உப்பு விளைத்தும், முத்தும் பவழமுங் குளித்தும், நீர்வாணிகஞ் செய்தும், கடலாலேயே வாழ்ந்ததனால், தம் தெய்வத்தைக் கடல் தெய்வமாகவே கொண்டு, அதற்கு வாரணன் என்று பெயரிட்டனர்.

வள்வர்வார். வார்தல் வளைதல். வார் + அணம் = வாரணம். நிலத்தை வளைந்து அல்லது சூழ்ந்து இருப்பதால், கடல் வாரணம் எனப்பட்டது. வலம்புரியும் இடம்புரியுமான சங்கு வாரணம் எனப் பெயர் பெற்றதும், உள் வளைந்திருப்பதனாலேயே. வாரணம் வாரணன் = கடலோன்.

வாரணன் வ. வருண.

தொல்காப்பியர் ஆரியம் தமிழகத்தில் வேரூன்றிய காலத்த வராதலின், வருணன்(தொல். 951) என்று வடசொல் வடிவிற் குறித்தார்.

இந்திய வாரியிலும் அமைதி(Pacific) வாரியிலும் பெரியதும் வலியதும் கொடியதுமான மீன் சுறாவாதலால், அதன் முதுகந் தண்டை வாரணன் சின்னமாக நட்டு, நெய்தல் வாணரான பரதவர் வணங்கியும் விழாவெடுத்தும் வந்தனர்.

'சினைச்சுறவின் கோடுநட்டு மனைச்சேர்த்திய வல்லணங்கினான் மடற்றாழை மலர்மலைந்தும்

பிணர்ப்பெண்ணைப் பிழிமாந்தியும்

புன்றலை யிரும்பரதவர்

உவவுமடிந் துண்டாடியும்

=

தீதுநீங்கக் கடலாடியும்”

(பட்டினப்.86-99)

"சுறவ முள்மருப் பணங்கயர் வனகழிச் சூழல். (பெரியபு. 25:7)

பாலைத் தெய்வம்

நீர்நிலைகளெல்லாம் வற்றி வறண்டு பெரும்பாலும் மக்கள் வழக்கற்ற பாலைநிலம், போர்க்களங்களும் ஆறலைப்பால் விழுந்த பிணங்களும் நிறைந்த பாழ்ங் காடாதலால், பிணந்தின்னும் பேய்