உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

ஐயன்

மலைமகன்

சூலி

ஐயை

மலைமகள்

சூலினி

தமிழர் மதம்

மலைமகன் மலைமகள் என்னும் இருபெயரும், மலைவாழ் தெய்வம் என்றே பொருள்படுவன.

அம்மையப்பன் வடிவம், இலங்கம்(லிங்கம்) என்னும் உருவடிவிலும், ஓம் என்னும் ஒலிவடிவிலும், பிள்ளையார் சுழி யென்னும் உகர வரிவடிவிலும் குறிக்கப்பெறும்.

இலக்கு = குறி. இலக்கு - இலக்கம் - இலங்கம்.

-

அம்மையப்பன் வடிவு, இறைவனின் உண்மை வடிவைக் காணமுடியாத இல்லறவாணரான பொதுமக்கட்கே. உயர்ந்த அறிவு படைத்த சித்தரும் முனிவரும், இறைவனின் ஆற்றலையே பெண் கூறாக உருவகிப்பர்.

இலங்க வடிவு நிலையில், இறைவ னாற்றலைக் குறிக்கும் அடித்தளத்திற்கு ஆவுடையாள் என்றும், மேல் நிற்கும் இலங்கத்திற்கு ஆவுடையப்பன் என்றும், பெயர். ஆவுடையாள் என்பது ஆவுடையம்மை, ஆவுடையாச்சி என்றும் வழங்கும். (3) குரவன்

தகுதியுள்ளவர்க்கு, அந்தண(அருள் முனிவன்) வடிவில் வந்து உயரறிவுறுத்தும் பரம ஆசிரியன்.

=

முனிவன் கோலத்திற் சடையுடைமையால், சிவன் சடையன், சடையப்பன் என்றும் பெயர் பெற்றான். புரம் = உயர்நிலைக் கட்டடம், அஃதுள்ள வூர். புரம் - பரம் மேலுலகம், வீட்டுலகம். பரம் - பரமன் = மேலோன், இறைவன். பரம் - வரம் - வரன்(குறள். 24). (4) எண் வடிவன் (அட்டமூர்த்தி)

நிலம், நீர், தீ, வளி, வெளி, கதிரவன், திங்கள், ஆதன்(ஆன்மா) என்னும் எண்பொருள் வடிவினன். எங்கும் நிறைந்திருப்பதுபற்றி எண்டிசையும் சிவனுக்கு எண் கையாகச் சொல்லப்படும். அதனால் எண்டோளன் பிங்.) என்று பெயர். கதிரவன் திங்கள் தீ என்னும் முச் சுடரும் சிவனுக்கு முக்கண்ணாகக் கூறப்படும். அதனால் அவனுக்கு முக்கண்ணன் என்று ஒரு பெயர்.

(5) நடவரசன்

உயிரானது நினைவு சொல்வு செயல் என்னும் முத்தொழிற் படுமாறு, உடம்பின் நடுவுள் தொங்கி நின்று இயங்கும் நெஞ்சத்