உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

35

துடிப்பை நடமாக வுருவகித்து, அதுபோன்று எல்லா உயிரினங் களும் (படைப்பு காப்பு அழிப்பு என்னும்) தோன்றல் வாழ்தல் மறைதல் ஆகிய முத்தொழிற் படுமாறு, பேருலகப் பரவெளி யுடம்பின் நடுவில் நின்று இறைவன் நெஞ்சம் இயங்குவதாகக் கோடித்து (பாவித்து), அவன் முத் தொழிலையும் இன்ப நடமாக வுருவகித்து, அவனை நடருள் தலைவனாக்கி, நடவரசன்(நடநாய கன், ஆடவல்லான்) என்று குறித்தனர். இவ் வுருவகம், “அண்டத்திற் கொத்தது பிண்டத்திற்கும்" என்னும் உண்மையை, பிண்டத்திற் கொத்தது அண்டத்திற்கும் எனக் காட்டியவாறாம்.

குமரிநா டிருந்த பண்டைக் காலத்தில், குமரிமலைக்கும் பனிமலைக்கும் நடுவிடத்திலிருந்த தில்லைநகரைப் பாண்டியன் பாருக்கு நெஞ்சத் தாவாகக் கொண்டு, அங்கு நடவரசன் திருப்படிமை நிற்க அம்பலம் அமைத்தான். நடவரசப் படிமைகள் நிற்கும் கோவில்க ளெல்லாம், அம்பல மென்று பெயர் பெற் றிருப்பது கவனிக்கத் தக்கது. அம்பலம் ஆடரங்கு. அம்பலக் கூத்தன், மன்றாடி என்பன தில்லைச் சிவன் பெயர்கள். பேரம்பலம் ஏற்பட்ட பின், ஆடம்பலம் சிற்றம்பலம் எனப்பட்டது. அப் பெயரே இன்று சிதம்பரம் எனத் திரிந்து வழங்குகின்றது. சிற்றம்பலம் பொன்னால் வேயப்பட்டபின், பொன்னம்பலம் எனப்பட்டது. அதன் பின்னரே மணியம்பலம் வெள்ளியம்பலம் செப்பம்பலம் முதலியவை தோன்றின.

-

கட்புலனாகக் காணும் நடவரசன் படிமை, அகக்கரண வளர்ச்சி யடையாத பொதுமக்கட் குரியதே. சிறந்த அறிவரான அடியார், திறந்த வெளியையே அம்பலமாகக் கருதுவர். அப் பரவெளி யம்பலமே திரை நீக்கிக் காட்டப்படும். அதுவே சிற்றம்பல மருமம்(சிதம்பர ரகஸியம்) என வழங்குவது.

நளி நடிநடம், நடனம். நடம் நட்டம் - நட்டுவன் நட்டம் -வ. ந்ருத்த, நாட்ய.

அரசன் என்னும் தென்சொல் வரலாற்றைத் தமிழர் வரலாறு என்னும் நூலிற் காண்க.

-

உம்முதல் = கூடுதல். உம் -அம் அமை. அமைதல் = 1.நெருங் குதல், அடர்தல். “வழையமை சாரல்" (மலைபடு. 181). 2. கூடுதல். அமை-அவை = கூட்டம், குழாம். 3. பொருந்துதல். "பாங்கமை பதலை” (கந்த பு. திருப்பர. 9). 4. நிறைதல். “உறுப்பமைந்து" (குறள்.761).

-

அம் - அம்பு அம்பல் = 1. கூடுதல், கூட்டம். ஒ.நோ: உம் - கும் கும்பு - கும்பல். அம்பல் - அம்பலம் = கூட்டம், அவை, கூடுமிடம், மன்றம்.