உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

தமிழர் மதம்

கலுழ்தல் = கலத்தல். கலுழ் -கலுழன் = வெண்டலையும் செவ் வுடம்புமாக இருநிறங் கலந்த பறவை.

கலுழன்-வ. கருட(garuda).

திருமால் படை

சங்கு, சக்கரம், வில், வாள், தண்டம் என்னும் ஐந்து.

ஐம்படை யுருவாகச் செய்த ஐம்படைத் தாலி யென்னும் அணியை, மத வேறுபாடின்றிச் சிறு பிள்ளைகட்குத் தொன்று தொட்டுக் காப்பாக அணிந்து வந்திருக்கின்றனர்.

"தாலி களைந்தன்று மிலனே

""

"பொன்னுடைத் தாலி யென்மகன்'

""

"அமளித் துஞ்சு மைம்படைத் தாலிக்

(புறம். 77)

(அகம்.54)

குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்" (மணிமே. 7: 56-7)

66

""

"அழகிய வைம்படையு மாரமுங் கொண்டு

(பெரியாழ். திரு. 1:4 5)

ஐம்படை சதங்கை சாத்தி

(பெரியபு. தடுத்தாட். 4)

(கலிங். அவ. 9)

(கம்பரா. நாடு. 58)

""

(திருவிளை. 39:25)

"தன்படைக ளானதிரு வைம்படை தரித்தே"

"தாலி யைம்படை தழுவு மார்பிடை'

"ஐம்படை மார்பிற் காணேன்

திருமால் நிலைகள்

வானிற் கலுழனூர்தலும், நிலத்தில் நிற்ற லிருத்தல் கிடத்தலும். கிடத்தற்குச் சிறந்த இடம் திருவரங்கம்.

-

திருவரங்கம் வ. ஸ்ரீரங்க.

திருமால் தொழில்

படைப்பு காப்பு அழிப்பு என்னும் மூன்று.

"உலகம் யாவையும் தாமுள வாக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா அலகி லாவிளை யாட்டுடை யாரவர்

தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே." (கம்ப. சிறப்புப் பா. 1)

திருமால் வழிபாடு

அக்கமாலைக்குத் தலைமாறாகத் துளசிமணி மாலை யணிந்து, திருநீற்றிற்குத் தலைமாறாகத் திருமண் காப்புச் சாத்தி, 'சிவபோற்றி' என்பதற்குத் தலைமாறாக 'மால் போற்றி' அல்லது