உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

43

'மாய போற்றி' என்று ஓதி, பிறவகைகளி லெல்லாம் சிவனியர் போன்றே செய்து வழிபடல்.

சிவனிய அரசர் சிவன் கோவில்கட்குச் செய்தது போன்று, மாலிய அரசரும் திருமால் கோவில்கட்குச் சிறப்புச் செய்து மானி யம் விட்டனர். இரு சாராருள்ளும் ஒருசிலர், சமயப் பொது நோக்கராயிருந்து இரு மதக் கோவில்கட்கும் இயன்றது செய்தனர். திருமால் கோவிற் பூசகர் திருவடி பிடிப்பான், நம்பி எனப் பெயர் பெற்றனர்.

கொண்முடிபு

பெரும்பாலும் சிவனியத்தை யொத்ததே. இறைவன் பெயரும் வீட்டுலகப் பெயரும் சில சொற்களும் மட்டுமே வேற்றுமை. மெய்ப்பொருளியல்

சிவனியத்தை யொத்ததே.

சிவனியமும் மாலியமும், எல்லாம் வல்ல இறைவனான ஒரே தெய்வத்தை வெவ்வேறு பெயரால் வணங்கும் மதங்களாதலால், சிவனுந் திருமாலும் வெவ்வேறு தெய்வ மென்றோ, அவரிடை ஏற்றத் தாழ் வுண்டென்றோ, குமரிநாட்டார் கொள்ளவில்லை.

"அரியுஞ் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில் மண்ணு.” என்பது பழமொழி.

66

‘அரனதிக னுலகளந்த வரியதிக னென்றுரைக்கு மறிவிலோர்க்குப் பரகதிசென் றடைவரிய பரிசேபோற் புகலரிய பண்பிற்றாமால்." (கம்பரா. நாடவிட். 24) என்றார் கம்பர். இரு மதத்தார் பிள்ளைகட்கும் ஐம்படைத்தாலி அணியப்பட்டு வந்ததும், இதை வலியுறுத்தும்.

முற்காலத்தில், ஆடவரும் பெண்டிர் போன்றே தலைமுடியை நீள வளர்த்துக் கொண்டை முடித்தனர். நோயில்லா நிலையில் முடி வெட்டுவது, அவமானத் தோல்விக்கும் துயரத்திற்கும் அடையாள மாகக் கருதப்பட்டது. இறைவன்முன் தம்மைத் தாழ்த்துவதற்கே, தெய்வப் பற்றாளர் திருக்கோவில்கட்குச் சென்று தம் தலையை மழித்துக் கொண்டனர். அவ் வழக்கம் இன்றும் ஓரளவு இருந்து வருகின்றது.

இனி, அடிமைகட்குக் காதில் துளையிடுவது அக்காலத்து வழக்கம். தெய்வப்பற்று மிக்க செல்வரும், தம்மை இறையடிமைய ராகக் கொண்டு, தம் காதில் துளையிட்டனர். அது தூர்ந்து போகாமைப் பொருட்டே, கடுக்கன் குண்டலம் முதலிய காதணி களை அணிந்துவந்தனர்.