உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

தமிழர் மதம்

மந்திர வெழுத்தும் சக்கரமும் பொறித்த தகட்டை உட் கொண்ட, குளிசம் போன்ற தெய்வக் காப்பான முன்கை யணியே, ன்று காப்பு என வழங்கி வருகின்றது.

நாகமும் நாகப்படமும் போன்ற உருவமைந்த எல்லா அணிகளும், தொடக்கத்தில் நாகவணக்கத்தைக் காட்டியவையே.

பண்டை ஐம்படைத்தாலியும் சங்குத்தாலியும் ஆமைத்தாலி யும் போன்று, இன்று குறுக்கை(சிலுவை)த் தாலியும் மூவிலைத் தாலியும் கிறித்தவப் பெண்டிரால் அணியப்படுகின்றன.

இங்ஙனம் தெய்வப்பற்றால் அணியப்படும் உருக்களெல்லாம், பொன்னாலும் மணியாலும் இயன்று, அழகிற்காக அணியும் அணிகலங்களாகவே மாறிவிடுகின்றன. என்றும் இயற்கை வடிவி லேயே அணியப்பட வேண்டிய அக்கமணியும், ஒரோ ஒருவரிடைப் பொற்பூச்சுப் பெற்று விடுகின்றது.

(3) கடவுட் சமயம்

ஊர் பேர் காலம் இடம் வண்ணம் வடிவம் பால் பருவம் முதலிய வரையறையின்றி, எங்கும் நிறைந்து, எல்லார்க்கும் எல்லா வற்றிற்கும் பொதுவாய், எல்லாம் வல்லதாய், என்றும் மாறாதிருக் கும் பரம்பொருளை உள்ளத்தில் அகக்கண்ணாற் கண்டு தொழுது, முக்கரணத் தூய்மையுடன் ஒழுகுவதே கடவுட் சமயமாம்.

பேர் என்றது, இயற்பெயரும் பண்புபற்றிய சிறப்புப் பெயரும் போன்றவற்றை.

கடவுட் சமயம், இல்லறம் துறவறம் என்னும் இருவகை அறவாழ்க்கைக்கும் பொதுவாம். அதனாற் பெறும் பேரின்பமும், இம்மை மறுமை யிரண்டிற்கும் பொதுவாம். இம்மையிற் பெறுவது உடலிருந்த வீடு என்றும், மறுமையிற் பெறுவது உடலிறந்த வீடு என்றும் பெயர் பெறும்.

எல்லாவற்றையும் கடந்து நிற்பவன் கடவுள். எல்லா வுலகங் களையும் ஆள்வதால் ஆண்டவன் என்றும், எங்குந் தங்கியிருப்ப தால் இறைவன் என்றும், எல்லா வுயிர்கட்கும் உணவைப் பகுத்தளிப் பதால் பகவன் என்றும் பெயர் பெறுவன். ‘ஆண்டவன்' முதலிய பிற பெயர்கள் பெருந்தேவ மதங்களிலும் வழங்குவதால், கடவுட் சமயத்திற்குத் தனிச் சிறப்பாகவுரிய தெய்வப் பெயர் கடவுள் என்பதே.

தெய்வம் என்னும் பெயர், இடத்திற் கேற்ப மூவகைத் தெய்வத் தையுங் குறிக்கும். “தெய்வம் உணாவே" (தொல். 964) என்பதிற் சிறு