உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

45

தெய்வத்தையும், "நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்”(இராமலிங்க அடிகள் பாடல்) என்பதிற் பெருந்தேவ னையும், “தெய்வம் நின்று கொல்லும்” என்னும் பழமொழியிற் கடவு ளையும், குறித்தல் காண்க. “வானுறையுந் தெய்வத்துள் வைக்கப் படும்” (குறள். 50) என்பதில், சிறுதெய்வத்தின் பாற்பட்ட தேவ ருலக வாழியைக் குறித்தது.

தன்வயத்தனாதல், எங்கும் நிறைதல், எல்லாம் வல்லனாதல், எல்லாம் அறிதல், என்று முண்மை, இயல் மாறாமை, முழுத் தூய்மை,ஒப்புயர்வின்மை, பேரருளுடைமை, வரம்பிலின்பமு டைமை என்பன கடவுளின் இயல்களாகச் சொல்லப் பெறும்.

எல்லாம் வல்ல இறைவணக்கத்தையே கொண்ட சிவனியம், மாலியம், யூதம், கிறித்தவம், இசலாம் முதலிய எல்லா மதங்கட்கும், கடவுட் சமயம் பொதுவாம்.

இசுமவேல் இசுரவேலரின் முன்னோனான ஆபிரகாமிற்கு முன்பே, நோவா காலத்துப் பெருவெள்ளத்திற்கும் முன்னரே, கடவுளை உலகில் முதன் முதலாகக் கண்டவர் குமரிநாட்டுத் தமிழரே. கடவுள் என்னுஞ் சொல் தொல்காப்பியத்தில் ஆளப்பட் டிருப்பதே, அதற்குச் சான்றாம்.

"காமப் பகுதி கடவுளும் வரையார்"

"கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே."

(தொல். புறத். 28)

(தொல். புறத். 33)

கடவுள் என்னுஞ் சொல், எல்லாவற்றையுங் கடந்து எண் ணிற்கும் எட்டாத பரம்பொருளையே குறிக்கும். சிறுதெய்வ வணக்க ஆரியர்(பிராமணர்), பிற்காலத்தில் அதைப் பிழைபட ஆண்டுவிட்டனர்.

கடவுட்கு உருவ மின்மையால், உருவ வணக்கமு மில்லை. எவரும் எங்கும் என்றும் தமித்தும் பிறரொடு கூடியும், கடவுளைத் தொழலாம்.

திருவள்ளுவர் கடவுட் சமயத்தார். அதனால், முதற் பகவன், வாலறிவன், மலர்மிசை யேகி, விருப்பு வெறுப்பில்லான், இறைவன், ஐம்புலம் வென்றான், உவமையிலி, அறவாழி யந்தணன், எண் குணத்தான், பிறவி நீக்கி எனக் கடவுட் குரிய பல்சமயப் பொதுப் பெயர்களையே தம் கடவுள் வாழ்த்தில் ஆண்டார்.