உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

கடவுளியல்பை விளக்கும் பாடல்கள்

"அங்கிங் கெனாதபடி யெங்கும் பிரகாசமாய்

ஆனந்த பூர்த்தியாகி

தமிழர் மதம்

அருளொடு நிறைந்ததெது தன்னருள் வெளிக்குளே அகிலாண்ட கோடி யெல்லாம்

தங்கும் படிக்கிச்சை வைத்துயிர்க் குயிராய்த்

தழைத்ததெது மனவாக்கினில்

தட்டாமல் நின்றதெது சமயகோ டிகளெலாம்

தந்தெய்வம் எந்தெய்வமென்

றெங்குத் தொடர்ந்தெதிர் வழக்கிடவும் நின்றதெது எங்கணும் பெருவழக்காய்

யாதினும் வல்லவொரு சித்தாகி யின்பமாய்

என்றைக்கு முள்ளதெதுமேற்

கங்குல்பக லறநின்ற எல்லையுள தெதுவது

கருத்திற் கிசைந்ததுவே

கண்டன வெலாமோன வுருவெளிய தாகவும்

கருதியஞ் சலிசெய்குவாம்."

'பண்ணே னுனக்கொரு பூசையொரு வடிவிலே

பாவித்தி றைஞ்சவாங்கே

பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப்

பனிமல ரெடுக்கமனமும்

நண்ணே னலாமலிரு கைதான் குவிக்கவெனின்

நாணுமென் னுளநிற்றி நீ

நான்கும்பி டும்போ தரைக்கும்பி டாதலால்

நான் பூசை செய்யல்முறையோ

விண்ணே விணாதியாம் பூதமே நாதமே

வேதமே வேதாந்தமே

மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்

வித்தே யவித்தின் முளையே

கண்ணே கருத்தேஎன் எண்ணே யெழுத்தே கதிக்கான மோனவடிவே

கருதரிய சிற்சபையி லானந்த நிருத்தமிடு கருணாகரக் கடவுளே.

""

(தாயு. பரசிவ. 1)

(தாயு. கருணா. 6)

"எட்டுத் திசையும் பதினாறு கோணமு மெங்குமொன்றாய் முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம் கட்டிச் சுருட்டித்தம் கக்கத்தில் வைப்பர் கருத்தில்வையார் பட்டப் பகலை யிரவென்று கூறிடும் பாதகரே.'

(பட்டினத். பொது. 30)