உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

47

"உளியிட்ட கல்லையும் ஒப்பிட்ட சாந்தையும் ஊத்தையற புளியிட்ட செம்பையும் போற்றுகி லேனுயர் பொன்னெனவே ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலொன்றும் வேண்டிலனே." (பட்டினத். பொது. 61)

முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய் அப்பாழும் பாழா யன்புசெய்வ தெக்காலம்."

(பத்திர. 113)

"வெட்ட வெளிக்குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக் கிட்ட வரத்தேடிக் கிருபைசெய்வ தெக்காலம். (பத்திர. 199)

"நட்ட கல்லைத் தெய்வமென்று

நாலு புட்பஞ் சாத்தியே

சுற்றி வந்து முணமுணென்று

சொல்லு மந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோநம் நாத னுள்ளி ருக்கையில் சுட்ட சட்டி சட்டுவம்க றிச்சு வைய றியுமோ."

கொண்முடிபு

""

(சிவவாக்.518)

சிவமதத்திற்குக் கூறிய கொண்முடிபே கடவுட் சமயத்திற்கும். தலைவன் தளையன் தளை என்னும் முப்பொருளை, கடவுள் கட்டுணி கட்டு என்று சொன்மாற்றியுங் கூறலாம்.

இல்லற வாயிலாகவும் இறைவன் திருவடியடையலாமாத

லால், நல்வினையாற் கேடில்லை.

"செய்குவங் கொல்லோ நல்வினை யெனவே ஐயம் அறாஅர் கசடீண்டு காட்சி

நீங்கா நெஞ்சத்துத் துணிவில் லோரே

யானை வேட்டுவன் யானையும் பெறுமே

குறும்பூழ் வேட்டுவன் வறுங்கையும் வருமே

அதனால், உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோர்க்குச் செய்வினை மருங்கின் எய்த லுண்டெனின்

தொய்யா வுலகத்து நுகர்ச்சியும் கூடும் தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின் மாறிப் பிறப்பின் இன்மையுங் கூடும் மாறிப் பிறவா ராயினும் இமயத்துக் கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்

தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே.'

(புறம்.214)