உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தமிழர் மதம் 'பிறவாராயினும்' என்பதில் உம்மை எதிர்மறை. 'அசைநிலை' என்று பழையவுரை கூறுவது பொருந்தாது.

இல்லறத்தாலும் வீடு பெறலாம் என்பதே குமரிநாட்டுத் தமிழர் கொள்கை. சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி பரவையாராகிய தேவ கணிகையரொடு இன்பம் நுகர்ந்தது, இறைவனுக் குடம்பா டென்று சொல்லப்படும்போது, இறைவன் வகுத்த முறைப்படி கரணத்தொடு மணந்த கற்புடை மனைவியொடு இல்லறம் நடத்துவது, எங்ஙன் இறைவனுக்கு ஏற்காதிருக்கும்?

மெய்ப்பொருளியல்

சிவமதத்திற்குக் கூறியதே கடவுட் சமயத்திற்கும்.

கடவுட் சமயம் துறவியர்க்கே உரிய தென்றும், இல்லறத் தார்க்கு உருவ வணக்கம் இன்றியமையாத தென்றும், தன்னலப் பிராமணப் பூசாரியரால், ஒரு தவறான கருத்து இற்றைத் தமிழ ருள்ளத்திற் புகுத்தப்பட்டுள்ளது. கிறித்தவரும் முகமதியரும் உருவத் துணையின்றியே இறைவனை வழிபட்டு வருகின்றனர். கற்றாருங் கல்லாருமான தமிழரும், வீட்டிலும் காட்டிலும் வழிப்போக்கிலும் துன்பம் நேர்ந்த விடத்து, அண்ணாந்து வானை நோக்கி "ஆண்டவனே!” அல்லது “கடவுளே” என்று விளித்து வேண்டுதல் செய்வது; அல்லது ஒருவர் அறமுறை தவறி அட்டூழியஞ் செய்யும் போது, வானை நோக்கி, "அதோ போகிறானே, அவன் கேட்பான்” என்று முறையிடுவது, இன்றும் வழக்கமாயிருக்கின்றது. ஆதலால், கல்லார்க்கோ, பொதுமக்கட்கோ, இல்லறத்தார்க்கோ, கடவுள் வணக்கமும் வழிபாடும் ஏற்கா தென்பது பொருந்தாது.

66

ரு

உருவ வணக்கப் பழைய ஏற்பாடு(Old Testament) நீங்கி, உரு விலா வணக்கப் புதிய ஏற்பாடு(New Testament) குமரிநாட்டிலேயே அறிஞரிடைத் தொடங்கிவிட்டதென்றும், அது ஈரறத்தார்க்கும் ஏற்குமென்றும், உண்மையறிக.

ஆரியர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழக இலக்கியம் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டமையால், அதினின்று சான்று காட்ட இயலா தென்றும்; மாடம் அழிந்தபின் அதினின்றெடுத்த உறுப்புகளைக் கொண்டமைத்த கூடம் போன்ற, பிற்காலத் திலக்கியத்தினின்றே சான்று காட்டப்படு மென்றும் அறிந்து

கொள்க.