உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

அசுவினியர்(அஸ்வின்)

தமிழர் மதம்

அசுவினி மருத்துவர் என்று சொல்லப்படும் இருவர்; கதிரவனின் குதிரை யூர்வாரும்(?) தேவமருத்துவரு மாவர்.

ஆதித்தர்(ஆதித்ய-Aditya)

முதலில் பிதிர்த்(பித்ரு) தெய்வங்களாகவும், பின்னர் அதிதி யின் மக்களாகவும் கருதப்பட்டவர். பின்னிலையில், முதற்கண் அறுவராகவும் பின்னர் எண்மராகவும் இறுதியிற் பன்னிருவராகவுங் கணிக்கப்பட்டவர். இறுதிநிலையிற் கதிரவனைப் பன்னிரு மாதத்திலும் படி நிகர்ப்பவராகக் கொள்ளப்பட்டனர்.

பரிசனியன் (பர்ஜன்ய)

முகில்தெய்வம். Ger. பர்கன்ய(parganya), Lit. பெர்க்குன (Per kuna), Old Slav. பெருனு(இடி), Russ. பெருன்.

வாயு

காற்றுத் தெய்வம்.

மருத்துக்கள் (மருத்)

புயற்காற்றுத் தெய்வங்கள். மழைக்கு உதவுவதால் அல்லது மழையொடு கூடி வருவதால், இந்திரனின் தோழர் எனப்படுவர்; இருபத்தொருவர் என்றும், நூற்றெண்பதின்மர் என்றும் சொல்லப் படுவர்.

உருத்திரன்(ருத்ர-Rudra)

சூறாவளி அல்லது கடுங்காற்றுத் தெய்வம். ருத்(rud) என்பதை மூலமாகக் கொண்டு, அழுபவன், ஊளையிடுபவன், உரறுபவன் என்று சொற்பொருளுரைப்பர்.

சினத்தவன் அல்லது வெகுள்வோன் என்று பொருள்படும் உருத்திரன் என்னும் தென்சொல்லின் திரிபாகக் கொள்ளினும், பொருந்தும். உருத்தல் = சினத்தல். உரு - உருத்திரம் - வ. ருத்ர, E. wroth, OE. wrath.

சோமன் (ஸோம)

மூசாவான் (Muja-vat) முதலிய மலைகளினின்று நிலா வெளிச் சத்திற் பிடுங்கிக்கொண்டு வந்த சோமக்கொடித் தண்டுகளை, இரு கல்லிடை நெருக்கிப் பிழிந்த சாற்றை வடிகட்டி, பெருங்கலங்களில் வார்த்து நெய்யும் மாவுங் கலந்து புளிக்கவைத்து, பதமானபின்