உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

குடிக்கும் நறுமண

53

ன்சுவைப் புளிங்காடியே, தேவரும் விரும்பும் 'சோம பானம்' என்னும் வெறிக்குடிப்பாம்.

இருக்கு வேதத்தின் 9ஆம் மண்டலத்திலுள்ள 114 பதிகங்கள் அனையவும், சோம தேவனையே முதிர்ந்த பத்திவணக்கப் பான்மையில்,

"சோமதேவன் அற்றங் காவாதவர்க்கு ஆடை அணிவிக்கின் றான்; நோயாளிகளை நலப்படுத்துகின்றான்; குருடருக்குப் பார் வையளித்து முடவரை நடக்கச் செய்கின்றான். எல்லா வல்லமை களும் அவனுக்குண்டு. எல்லா ஈவுகளும் அவனிடத்திலேயே பெறற் குரியன. அவன் இறவாத தெய்வத் தன்மையன்; தேவர்க்கும் மாந்தர்க் கும் இறவாமை யளிப்பவன்” என்று போற்றிப் புகழ்கின்றன.

ஓரிடத்தில், "ஓ தூய்மை யானவனே! நித்த லொளியும் மகமையுமுள்ள அப் பொன்றா வுலகிற்கு என்னை உய்ப்பாயாக" என்னும் வேண்டுதலு முள்ளது.

இவற்றை நடுநிலையாய் நோக்கின், கட்குடியன் பிதற்றல் கட்கும் இவற்றிற்கும் வேறுபாடின்மை, தெற்றெனத் தெரியும். சோமன் பக்கொசு(Bakkhos) என்னும் கிரேக்க மதுத் தெய் வத்தை ஒத்தவன்.

துவட்டா(த்வஷ்டா)

தேவ கம்மியன். வொல்கான்(Volcan) என்னும் உரோமத் தெய் வத்தை ஒத்தவன்.

இரிபுக்கள் (ரிபு -Ribhus)

வாசன் (வாஜ), விபுவா (விப்வா), ரிபு என்னும் மூவர்; சுதன்வ முனிவரின் புதல்வர். வியக்கத் தக்க செயல்களைச் செய்து, இந்திரனின் நட்பைப் பெற்றுத் தேவராகி, சோமத்தைப் பருகத் தகுதி யடைந்தனர்.

விசுவகர்மன்(விச்வகர்மா)

உலகமைப்போன்.

பிரசாபதி(ப்ரஜாபதி)

உயிரினம் படைப்போன்.

பிருகற்பதி(ப்ருகஸ்பதி - Brihaspati)

தேவரின் சடங்காசிரியன்(புரோகிதன்). பிராமணசுபதி(Brahma- naspati) என்றும் சொல்லப்படுவான்.