உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

வாச்(Vac)

தமிழர் மதம்

பேச்சுத் தெய்வம். பிராமணத்தில் வேதத் தாய் என்று

சொல்லப்படுவள்.

பூசன் (பூஷன்)

கால்நடைகளைக் காக்குந் தெய்வம்.

அபாம் நபாத்து(அபாம் நபாத்)

கோட்டைக்குள் பெண்டிராலும் நீராலும் சூழப்பட்டிருக்கும் இடைவெளியுலகத் தெய்வம். முகிலிடை மின்னலாயிருக்கலா மென்பது ஆராய்ச்சியாளர் கருத்து.

திரிதன்(த்ரித)

ஓர் இந்தோ இரானியத் தெய்வம்.

வனற்பதி (வனஸ்பதி)

திதி

ஒரு பெருமரத் தெய்வம்.

ஓரிடத்தில் அதிதி, வருணன், மித்திரன் முதலியவருடனும், மற் றோரிடத்தில் சவிதா, பகன்(ஓர் ஆதித்தன்) முதலியவருடனும் விளிக் கப்படும் பெண் தெய்வம்.

சரசுவதி(ஸரஸ்வதி)

முதற்கண் ஓர் ஆற்றுத் தெய்வம்; பின்னர் நாமகள்.

பாரதி(Bharati)

ஆதித்தன் மகள்; பின்னர் நாமகள்.

பிதிர்க்கள் (பித்ரு

தனிப்பட்டவரின் முன்னோரும் மன்பதை முன்னோருமான பிதிருலக ஆவிகள்.

யமன், யமி

யமன் விவசுவானின் மகன் என்றும், பிதிர்க்கள் இருக்கும் உலகத்திற்கு அரசன் என்றும், அவன் வீட்டை நாற்கண்ணும் அகன்ற மூக்குத் துளைகளும் உள்ள இரு கொடிய நாய்கள் காக்கின்றன வென்றும், அவனும் யமியும் இரட்டைப் பிள்ளைகள் என்றும், யமி அவனை மணக்க விரும்பியபோது உடன்பிறந்தாளை

ரு