உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

55

மணக்கக் கூடாதென்று அவன் மறுத்துவிட்டான் என்றும், இருக்கு வேதம் பத்தாம் மண்டலம், 10ஆம் 14ஆம் பதிகங்களிற் கூறப்பட் டுள்ளது.

யமன் முதன் முதலாக இறந்து விண்ணுலகம் சென்ற மாந்தன் என்று, அதர்வ வேதம் கூறும்.

யமன் புளூட்டோ என்னும் உரோமத் தெய்வத்தை ஒத்தவன். அவன் நாய்கள் புளூட்டோவின் கொடிய (செர்பெரசு - Cerberus என்னும்) முத்தலை நாயை ஒத்தன.

பெண்தெய்வங்கள்

பிருதுவி, இளா, சரசுவதி முதலிய பெண்தெய்வங்களுடன், வேறு சில ஆண்தெய்வங்களின் மனைவியரும் கூறப்பட்டுள்ளனர். ஆயின் அவர்க்குச் சிறப்புத் தொழிலில்லை.

எ-டு:

ஆண்பால்

இந்திரன்

வருணன்

அக்கினி

அசுவின்

பெண்பால்

இந்திராணீ

வருணானீ

அக்கினாயீ

அசுவிm

இணைத்தெய்வங்கள்

த்யாவா பிருத்வீ, மித்ரா வருணௌ, இந்த்ராக்னீ, இந்த்ரா வருணௌ, ஸோம ருத்ரௌ எனப் பல தெய்வங்கள், வேத மந்திரங் களில் அடிக்கடி இணைந்தும் விளிக்கப்படுகின்றன.

கணத் தெய்வங்கள்

மருத்துக்கள், ரிபுக்கள், விசுவே தேவர், வசுக்கள், உருத்திரர், ஆதித்தியர், ஆப்பிரியர் என்பவர் வெவ்வேறு தேவ குழுவார்.

வேள்விக்கு உரிய விறகு, தருப்பைப் புல் முதலிய பன்னிரு பொருள்கள் ஆப்பிரியர்(ஆ-ப்ரீயஸ்) என்னும் தெய்வங்களாக விளிக்கப் பெறும்.

மூவகைத் தெய்வங்கள்

மண்ணுலகத்(பூலோக) தெய்வங்கள்: பிருதுவி, துவட்டா, வனற்பதி முதலியவை.

இடைவெளி யுலகத்(அந்தரிக்ஷ லோக) தெய்வங்கள்: வாயு, வருணன், உருத்திரன், மருத்து, சவிதா, யமன், உழை, பிருகற்பதி முதலியன.