உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

59

"The name of Indra is peculiar to India, and must have been formed after the separation of the great Aryan family had taken place, for we find it neither in Greek, nor in Latin, nor in German.'

66

- India, What can it teach us?(p.182)

We know from the Veda itself that there were sceptics, even at that early time, who denied that there was any such thing as Indra."

- Herbert Lectures(p.307)

இந்திர வணக்கத்தையும் காளி காளி வணக்கத்தையும் மேற் கொண்டும், சில பிராகிருத(வடதிரவிட) மன்னரைத் துணைக் கொண்டும், வடஇந்தியா முழுவதையும் அடிப்படுத்திய பின், ஆரியர் விந்தியமலை தாண்டித் தென்னாடு வந்தனர். மக்கட் குடியிருப்பு மிக்கில்லாத தண்டகக் காட்டையும், குடியிருப்பிலும் ஆட்சி முறையிலும், அதினுஞ் சிறந்த தக்கணத்தையும், படிப்படி யாகக் கடந்து தமிழகம் வந்த பின், தலைசிறந்த நாகரிகத்தையும் நாட்டு வளத்தையும் தமிழுயர்வையும் இலக்கியச் சிறப்பையும் மூவேந்தர் செங்கோ லாட்சியையும் கண்டு, வியந்து வெஃகி, வட நாட்டில் தாம் கையாண்ட வழிகளையே தென்னாட்டிலுங் கையாண்டு முதற்கண் மூவேந்தரையும் தம் அடிப்படுத்தத் திட்ட மிட்டு, அதன்படியே எல்லாவற்றையுஞ் செய்து வருவாராயினர். (2) ஏமாற்று

வெப்ப நாட்டு வாழ்க்கையால் தமிழருட் பெரும்பாலார் கருத் திருந்ததையும், மூவேந்தரும் முந்தியல் பேதைமை மதப்பித்தம் கொடைமடம் ஆகிய முக்குணங்களைக் கொண்டிருந்ததையும், கண்ட ஆரியர், தம் வெண்ணிறத்தையும் வேதமொழியின் வெடிப் பொலியையும் பயன்படுத்தி, தாம் நிலத்தேவர்(பூசுரர்) என்றும், தம் வேத மொழி தேவமொழியென்றும் கூறி ஏமாற்றிவிட்டனர். அதனால், அவர் என்ன சொன்னாலும் நம்பவும், எது கேட்டாலும் கொடுக்கவும், அவரைத் தெய்வமாக வழிபடவும், வேண்டிய தாயிற்று.

,

"தெய்வா தீனஞ் ஜகத்ஸர்வம் மந்த்ரா தீனந்து தைவதம்

தன் மந்த்ரம் ப்ராஹ்மணாதீனம்

ப்ராமணா மமதைவதம்.

""

இதன் பொருள்: உலகம் தெய்வத்துள் அடக்கம்; தெய்வம் மந்திரத்துள் அடக்கம்; மந்திரம் பிராமணருள் அடக்கம்; ஆதலாற் பிராமணரே நம் தெய்வம்.

ஒருசார் பழங்குடி மக்களின் பேதைமை கண்டு, பிராமணரே இங்ஙனம் தம்மைப் புனைந்துரைத்துக் கொண்டனர்.