உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

""

தமிழர் மதம்

"மன்னன் எப்படி, மன்னுயிர் அப்படி. ஆதலால், மூவேந் தரும் சென்ற நெறியே பொதுமக்களும் சென்றனர். திருவள்ளுவர் போன்ற தெள்ளறிஞர் எத்துணை நல்லறிவு கொளுத்தி எச்சரிப் பினும், பேதை வேந்தர் பொருட்படுத்தியிலர். பிராமணர்க்குக் கடவுட்குரிய பகவன்(பகுத்தளித்துக் காப்பவன், படியளப்பவன்) என்னும் பெயர் இலக்கிய வழக்கில் வழங்கத் தொடங்கிற்று. உலக வழக்கில் அவரைச் 'சாமி' என்றனர். சொம் - சொத்து. சொம் வ. ஸ்வாம்.சொம் - சொம்மி - வ. ஸ்வாமின்.

(3) நாற்பிறவிக் குலப் பிரிவினை

தொழில் ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பொருளிலக்கணத்திற் கூறப்பட்டுள்ள, அந்தணர் அரசர் வணிகர் வேளாளர் என்னும் நாற்பாற் பாகுபாட்டைத் தீய முறையிற் பயன் படுத்திக்கொண்டு, இந்தியரெல்லாரையும் தொழில் நிற அடிப்படை களில் பிராமணர் சத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் நால்வரணப் பிறவி வகுப்புகளாக வகுத்து, அவை முறையே ஒன்றினொன்று தாழ்ந்தவையென்றும், தாம் பிராமணரும் ஏனையர் னையர் ஏனை மூவகுப்பாரு மாவர் என்றும், இப் பாகுபாடு இறைவன் படைப்பே யென்றும், கூறிவிட்டனர் ஆரியப் பூசகர்.

"ப்ராஹ்ம ணோஸ்ய முகமாஸீத் பாஹூ ராஜன்ய; க்ருத:

ஊரூத தஸ்ய யத்வைஸ்ய:

பத்வியாக்ம் ஸூத்ரோ அஜாயத.

""

இது இருக்கு வேதம் 8ஆம் அட்டகத்திலுள்ள புருடசூத்தம் (புருஷ ஸூக்த) என்னும் பகுதியைச் சேர்ந்ததாகும்.

- ள்) பிராமணன் பிரமத்தின் முகத்தினின்றும், சத்திரியன் அதன் தோளினின்றும், வைசியன் அதன் தொடையினின்றும், சூத் திரன் அதன் பாதத்தினின்றும் தோன்றினர்.

பிராமணர் தமிழகம் வந்தபின், அந்தணர்(அருளாளர்) என்னும் தமிழ முனிவர் பெயரையும் மேற்கொண்டனர்.

பாரதம் - அநுசாச. நீக பருவம் -பூதேவர் மகிமை யுரைத்த சருக்கத்து,

"அந்தணர்கள் தவவலிய ரசர் செங்கோல் நிகழ்வதெலாம் அந்தணர்க ளொழுக்கத்தா லாருயிர்கள் செறிவதெலாம் அந்தணர்கள் நான்மறையா லருமாரி பொழிவதெலாம் அந்தணரி லதிகருல கதிலுண்டோ புகலாயே.

22