உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

66

'ஆயுள்வேண் டினர்செல்வ மாண்மைவேண் டினர்மிக்க சேயைவேண் டினர்தத்தஞ் சீலம்வேண் டினர்முத்தி நேயம்வேண் டினர்சுவர்க்க நீடுவேண் டினர்விப்பிரர் தூயதா ளினிற்றொழுது சூழ்வரே யேற்றமென

என்னும் செய்யுள்களும்,

"இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த

நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே

61

(புறம்.6:19-20)

என்னும் புறநானூற் றடிகளும் பிராமணர் இந்தியா வெங்கும் பெற்றிருந்த மாபெரு மதிப்பை யுணர்த்தும்.

(4) முத் திருமேனிப் புணர்ப்பு

தமிழப் பொதுமக்கள் அரசரைப் பின்பற்றிப் பிராமணர்க்கு எத் துணை அடிமைப்பட்டுப் போயினும், ஆரிய வேள்வி மதத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை. பிராமணரும், வடநாட்டிற் சிவக் குறி (இலங்க) வணக்கஞ் செய்து வந்த சிவனியரை ஆண்குறித் தெய்வ வணக்கத்தார்(சிச்ன தேவ) என்று பழித்து வந்தாரேனும், தென்னாடு வந்தபின் சிவனிய மாலியங்களின் உயர்வையுணர்ந்து, அவற்றை ஆரியப்படுத்தற்கு, இறைவன் முத்தொழிலையும் வெவ்வேறு பிரித்து, தாம் புதிதாகப் படைத்த பிரமனைப் படைப்புத் தேனென் றும், முத்தொழில் திருமாலைக் காப்புத் தேவ னென்றும், முத் தொழிற் சிவனை அழிப்புத் தேவனென்றும், முத்திருமேனிக் கொள் கையைப் புகுத்திவிட்டனர்.

ஆயினும், தமிழர் பிரமனை ஒப்புக்கொள்ளவில்லை. அதனால், அவனுக்குக் கோவிலும் கும்பீடும் இல்லாது போயின. அதோடு, அடி முடி தேடிய கதையால் அவன் பெரும் பொய்யனாகவும் காட்டப் பட்டான். பிராமணரோ, முத்திருமேனியரும் ஒருவரே என்பதை உணர்த்தற்கு, எங்கும் என்றும் முக்கோலுங் கையுமாய்த் திரிந்தனர்.

66

"நூலே கரகம் முக்கோல் மணையே ஆயுங் காலை அந்தணர்க் குரிய.

99

(தொல். மரபியல், 71)

"உறித்தாழ்ந்த கரகமு முரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ, வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயன்மாலைக் கொளைநடை யந்தணீர்

. 99

(கலித்.9)

சிச்ன(தேவ) என்னும் வடசொல்லும் தென்சொல் திரிபே. சண்ணு - சண்ணம் -வ. சிச்ந.

பிராமணர், அவர்க்குரிய கல்வித் தொழிற் கேற்றவாறு, கூர் மதியராய்ப் படைக்கப்படுகின்றார் என்னும் ஆரியக் கருத்தைப் பிற