உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

65

முளைமந்திரமான (பிரணவம் என்னும்) ஓங்காரத்தின் பொருள் தெரியாமையால், பிரமன் முருகனாற் குட்டப்பட்டான் என்பது இங்குக் கவனிக்கத் தக்கது.

திருமால் அணங்கு(மோகினி) வடிவுகொண்டு சிவனுக்குத் தேவியானதால், அரி என்னும் பெயர் அரன்(சிவன்) என்பதன் பெண் பாலாகவும் இருக்கலாம். ஆயின், ஹரி என்னும் வடசொற்குப் பச்சை நிறத்தன் என்று பொருள் கூறுவர். பச்சையும் நீலமும் கருமைக்கு இனமான நிறங்களாதலாலும், திருமாலுக்குப் பச்சை (பச்சையன்) என்னும் பெயருண்மையாலும், ஹரி என்னும் சொற்குப் பச்சை யென்னும் பொருட்கரணியம் ஊட்டினது, தமிழ் வழக்கைத் தழுவியதாகவே யிருத்தல் வேண்டும்.

பெருமாள் என்னும் திருமால் பெயர் பெருமகள் என்பதன் மரூஉவாகக் கொள்ளற்கு இடந்தருமேனும், பெருமால்(மகா விஷ்ணு) என்பதன் திரிபென்று கொள்வதே மிகப் பொருத்தமாம்.

காளியை ஆரியத் தெய்வ மாக்கியதோடு பத்திரகாளி, மாரி, பிடாரி, சண்டி(சண்டிகை), துர்க்கை, சாமுண்டி, மகிடாசுர மர்த்தனி, நிசும்பசூதனி எனப் பல பெயர் கொடுத்து, ஆரியச் சொற்களே வழங்குமாறும், பல்வேறு பெண்தெய்வ மென்று கல்லா மாந்தர் கருதுமாறும் செய்துவிட்டனர்.

(7) தொல்கதைக் கட்டு

தமிழ நாகரிகத்தையும் மதங்களையும் ஆரியப்படுத்தற்கும், தமிழனைத் தாழ்த்திப் பிராமணனை உயர்த்தற்கும், பதினெண் தான்மங்களையும் (புராணங்களையும்) பதினெண் துணைத் தொன்மங்களையும் (உபபுராணங்களையும்) இயற்றிக்கொண் டனர். அவற்றுள் 'கந்த புராணம்' என்னும் ஒன்றுமட்டும், ஓரரிசிப் பதம் பார்ப்பாக இங்கு ஆராயப்படும்.

முருகன் பிறப்பு

66

"இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட நாளிலே, இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டுமென்று வேண்டிக் கொள்ள, அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப, அதனை இருடி களுணர்ந்து அவன் பக்கனின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே, இறையவன் கூறாகிய முத்தீக்கட் பெய்து அதனைத் தம் மனைவியர் கையிற் கொடுப்ப, அருந்ததி யொழிந்த அறுவரும் வாங்கிக் கொண்டு விழுங்கிச் சூன் முதிர்ந்து சரவணப் பொய்கையிற் பதுமப் பாயலிலே பயந்தாராக, ஆறு கூறாகி