உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடைநிலையியல்

69

தோற்றது பிராமணக் குலத்திற் பிறந்து அரசர் வகுப்பை அழிக்கவே தோன்றிற்று என்பதும், உத்திக்குப் பொருந்தாதனவும் தன்முரணான வும் தோற்றர விலக்கணத்திற்கு முற்றும் மாறானவுமாகும்.

8ஆம் 9ஆம் தோற்றரவுக் கதைகள், ஒரே காலத்தில் நிகழ்ந்த தொடு அண்ணன் தம்பி முறைப்பட்டனவாகவும், அவற்றுள் மூத்தது மக்களினத்திற்குச் சிறந்த முறையிற் பயன்படாததாகவும், இருந்ததனால், அம் மூத்தது தோற்றர விலக்கணம் இல்லதேயாம்.

இனி, 10ஆம் தோற்றரவோ வெனின், அது கலியூழி முடிவில், சம்பளம் என்னும் சிற்றூரில், விட்டுணு எச்சன்(விஷ்ணு யஜ்ஞ) என்னும் பிராமணன் இல்லத்திற் குதிரைமுகத்தொடு பிறந்து, அல்லவை நீக்கி அறத்தை நிலைநிறுத்துவதாம். இது ஒருவகையிலும் ஒவ்வாத தேனும், இதன் தீர்ப்பைக் கலியூழி முடிவுக் காலத்தினர்க்கே விட்டுவிடுவது நன்று.

இதுகாறுங் கூறியவற்றால், திருமாலை இயன்றவரை ஆரியத் தெய்வமாகக் காட்டுவதே, தோற்றரவுக் கதை நோக்கம் என்பதைத் தெற்றெனத் தெரிந்துகொள்க.

(8) தெய்வ வடிவு மாற்றம்

பகீரதன் கதையாற் சடைமேற் கங்கையும், திங்கள் சாவம் பெற்ற கதையால் முடிமேற் பிறையும், நஞ்சுண்ட கதையாற் கழுத்திற் கருநிறமும், தாருகவனக் கதையாற் கரியுரிப் போர்வையும், பிரமன் தலை கொய்த கதையாற் கையில் மண்டையோடும், பிராமண வொப்புமையாற் பூணூலுங் குடுவையும், தமிழச் சிவன் வடிவை ஆரிய வடிவாக மாற்றின.

இக் கதைகளால், கங்கை யணிந்தோன் (கங்காதரன்), மதிசூடி, பிறைசூடி (சந்திரசேகரன்), மதியழகன் (சோமசுந்தரன்), கறை மிடற்றோன்,மணிமிடற்றோன்(நீலகண்டன்), மண்டையேந்தி (காபாலீ), இரப்பெடுத்தோன்(பிச்சாடனன்) முதலிய பெயர்கள் தோன்றின. "முட்டி புகும் பார்ப்பார்” என்று பழிக்கப்பட்டதனால், அப் பழிப்பை நீக்கச் சிவபெருமானையும் ஓர் இரப்போ னாக்கிவிட்டனர்.

பிராமணர்

தாருகவனக் கதையால், அரியரன்(ஹரிஹரன்), சிவமால் (சங்கர நாராயணன்) என்னும் பெயர்களும் தோன்றின.

திருமாலுக்கு, நரன்மகன்(நாராயணன்), அரவணையன் (சேஷசாயி) முதலிய பெயர்களுடன், தோற்றரவுக் கதைகள்பற்றிய பல் வேறு பெயர்களும் தோன்றின.