உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

தமிழர் மதம்

(சன்னியாசம்) என நானிலைப்பட்ட தென்றும், ஆரியப் பார்ப்பான் (பிராமணன்), அரச மறவன் (சத்திரியன்), வேளாண் வணிகன் (வைசியன்), கீழ்மகன்(சூத்திரன்) என்னும் நால்வரணங்களும் இறைவன் படைப்பென்றும், ஒவ்வொரு வரணத்தாரும் தத்தம் குலத்தொழிலைச் செய்வதே ஒழுக்கம் (தருமம்) என்றும், சூத்திரன் தன் குலவொழுக்கத்தில் நின்று பிராமணனுக்குத் தொண்டு செய்வதனால் மறுபிறப்பில் வைசியனாகி, பின்னர் இவ்வாறே படிமுறையாகப் பிறப்புயர்ந்து இறுதியிற் பிராமணனாவா னென்றும், அவ்வவ் வரணத்திற் கேற்பவே முக்குணங்களும் முந்நாடிகள்போல் மிக்குங் குறைந்தும் நிற்கு மென்றும், ஆரியர் தம் மேம்பாட்டிற் கேதுவாகத் தம் மனம்போற் கொண்முடிபு வகுத்துக் கொண்டனர்.

சிவனியக் கொண்முடிபில், வீடுபேற்று வாயில்கள் கோவில் தொண்டு (சரியை), வழிபாடு(கிரியை), ஓகம்(யோகம்), அறிவை (ஞானம்) என நான்காகக் கூறப்பட்டது. மாலியத்தில் கருமம் (கன்மம்), ஓதி(ஞானம்), புகலடைவு, பத்தி(பிரபத்தி) என்பன இறைவனை யடையும் நாற்படிகளாகக் கொள்ளப்பட்டன. கல்வியைப் பிராமணன் குலத்தொழிலாகக் கொண்டதினாலும், விருந்தோம்பலும் வேளாண்மையும் ஈகையும் ஒப்புரவொழுகலும் பிராமணனுக் கின்மையாலும், ஓதியே வீடுபேற்றிற்குச் சிறந்த வாயிலெனக் கூறினர். கண்ணப்ப நாயனார், இளையான்குடி மாறநாயனார் முதலிய சிறந்த அடியார்கள், வழிபாட்டாலும் தொண்டாலுமே வீடுபேறெய்தினர். உண்மையான வீடுபேற்று வாயில்கள் அறிவு அன்பு என்னும் இரண்டே. அறிவென்பது, இறை வனையும் அவனையடையும் வழியையும்பற்றி அறிந்து கொள்வது. அவ்வழி, இல்லறம் துறவறம் என்னும் இரண்டுமாம். அன்பென்பது தொண்டும் ஈகமும்(தியாகமும்).

در

در

"அன்பிற்கு முண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்."

"அன்பிலா ரெல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு.

""

"அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிகிலார்

அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்

அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே."

(குறள்.71)

(குறள்.72)

(திருமந்.257)

அன்பெல்லாம் முட்டுண்டவிடத்து ஈகத்தில்தான் முடியும்.